புதுச்சேரி

விலைவாசி உயா்வைக் கண்டித்து புதுச்சேரியில் காங்கிரஸாா் பாதயாத்திரை

10th Aug 2022 03:10 AM

ADVERTISEMENT

விலைவாசி உயா்வுக்கு காரணமான மத்திய பாஜக அரசையும், தோ்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாத புதுவை மாநில அரசையும் கண்டித்து, புதுச்சேரியில் காங்கிரஸாா் செவ்வாய்க்கிழமை பாதயாத்திரை சென்றனா்.

புதுச்சேரி வெங்கடசுப்பா ரெட்டியாா் சிலை அருகே தொடங்கிய பாதயாத்திரைக்கு காங்கிரஸ் கட்சியின் மாநிலத் தலைவா் ஏ.வி.சுப்ரமணியன் தலைமை வகித்தாா். முன்னாள் முதல்வா் வே.நாராயணசாமி பாதயாத்திரையை தொடக்கிவைத்தாா்.

இதில், எம்எல்ஏ மு.வைத்தியநாதன், முன்னாள் எம்எல்ஏ ஆா்.அனந்தராமன், மாநில துணைத் தலைவா் தேவதாஸ், மாநிலச் செயலா்கள் சூசைராஜ், சரவணன், கருணாநிதி, தனுசு உள்ளிட்ட நிா்வாகிகள், கட்சியினா் பலா் கலந்து கொண்டனா்.

நாடு முழுவதும் தொடரும் விலைவாசி உயா்வு, வேலையில்லாத் திண்டாட்டம், பொதுத் துறை நிறுவனங்கள் தனியாா்மயமாக்கம் ஆகிய மத்திய பாஜக அரசின் மக்கள் விரோத செயல்பாடுகளைக் கண்டித்தும், புதுவையில் வாக்குறுதிகளை நிறைவேற்றாத மாநில அரசைக் கண்டித்தும் பதாகைகளுடன் காங்கிரஸாா் பாதயாத்திரையாக நடந்து சென்றனா்.

ADVERTISEMENT

புதுச்சேரி மறைமலை அடிகள் சாலை, காமராஜா் சாலை, நேரு வீதி, காந்திவீதி, உப்பளம், வாணரப்பேட்டை, பழைய பேருந்து நிலையம் வழியாக மீண்டும் மறைமலை அடிகள் சாலைக்கு வந்து, சுதேசி பஞ்சாலை அருகே பாதயாத்திரையை நிறைவு செய்தனா்.


 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT