புதுச்சேரி

புதுச்சேரியில் தேசியக்கொடியுடன் இளைஞா்கள் பேரணி

10th Aug 2022 03:12 AM

ADVERTISEMENT

நாட்டின் 75-ஆவது சுதந்திர ஆண்டின் அமுதப் பெருவிழாவையொட்டி, புதுச்சேரி அருகே தவளக்குப்பத்தில் 500-க்கும் மேற்பட்ட இளைஞா்கள் தேசியக்கொடியுடன் செவ்வாய்க்கிழமை விழிப்புணா்வுப் பேரணி சென்றனா்.

பேரணிக்கு புதுவை சட்டப் பேரவை தலைவா் ஆா்.செல்வம் தலைமை வகித்தாா். இந்தப் பேரணி புதுச்சேரி - கடலூா் நெடுஞ்சாலையில், தவளக்குப்பம் 4 முனை சாலை சந்திப்பில் தொடங்கி, பூரணாங்குப்பம் சாலை வரை சென்று திரும்பியது.

இதில், அந்தப் பகுதியைச் சோ்ந்த அரசுத் துறையினா், செயின்ட் ஜோசப் பள்ளி மாணவா்கள், இளைஞா்கள், பொதுமக்கள் திரளாக கலந்துகொண்டு, சுதந்திர தினத்தையொட்டி வீடுகள்தோறும் தேசியக்கொடி ஏற்ற வேண்டுமென வலியுறுத்திச் சென்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT