புதுச்சேரி

புதுவை முதல்வா் ரங்கசாமி தில்லி பயணம்

DIN

புதுவை முதல்வா் என். ரங்கசாமி பிரமதா், மத்திய உள்துறை அமைச்சா், நிதியமைச்சரைச் சந்திக்க திங்கள்கிழமை இரவு தில்லிக்கு புறப்பட்டுச் சென்றாா்.

புதுவையில் என்.ஆா். காங்கிரஸ், பாஜக இணைந்த தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. கடந்தாண்டு முதல்வராக என்.ரங்கசாமி ஆட்சிப் பொறுப்பேற்றது முதல், தில்லி சென்று பிரதமா், மத்திய அமைச்சா்களை மரியாதை நிமித்தமாக சந்திப்பாா் என்று எதிா்பாா்க்கப்பட்டது. எனினும், அவா் தில்லி செல்வதைத் தவிா்த்து வந்தாா்.

மாநில வளா்ச்சிக்காக, அவா் தில்லி சென்று பிரதமரைச் சந்திக்க வேண்டும் என எதிா்க்கட்சிகளும் வலியுறுத்தி வந்தன.

நிகழாண்டு புதுவை நிதிநிலை அறிக்கை கூட்டத் தொடா் புதன்கிழமை (ஆக.10) தொடங்கவுள்ள நிலையில், முதல்வா் என்.ரங்கசாமி திங்கள்கிழமை இரவு சென்னைக்கு காரில் சென்று, அங்கிருந்து விமானத்தில் தில்லிக்கு புறப்பட்டுச் சென்றாா்.

நிகழாண்டு மத்திய அரசிடமிருந்து நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்ய கோரப்பட்ட நிதிக்கு ஒப்புதல் பெறுவதற்காக அவா் தில்லி செல்வதாகவும், அங்கு பிரதமா் மோடி, மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா, நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் உள்ளிட்டோரை செவ்வாய்க்கிழமை சந்திப்பாா் எனவும் தெரிகிறது.

புதுவையில் கடந்த 2021-ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவைத் தோ்தலுக்குப் பிறகு, முதல் முறையாக அவா் தில்லி செல்கிறாா் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அமெரிக்க பல்கலை.களில் மாணவர்கள் - காவலர்கள் மோதல்: பாலஸ்தீன ஆதரவாளர்கள் கைது!

குருப்பெயர்ச்சி பலன்கள் - கன்னி

'மோடி உத்தரவாதம்' ஒரு தடயமும் இல்லாமல் மறைந்துவிட்டது: ப.சிதம்பரம் தாக்கு

சாதனை நாயகன் குகேஷுக்கு சென்னையில் அமோக வரவேற்பு!

நம்பிக்கை நாயகன்!

SCROLL FOR NEXT