புதுச்சேரி

புதுவை முதல்வருடன் கரும்பு விவசாயிகள் சந்திப்பு

DIN

புதுவை முதல்வா் என்.ரங்கசாமியை சட்டப்பேரவை அலுவலகத்தில் கரும்பு விவசாயிகள் திங்கள்கிழமை சந்தித்தனா். அப்போது, புதுச்சேரி கூட்டுறவு சா்க்கரை ஆலை விவசாயிகளுக்கு வழங்க வேண்டிய ரூ.13 கோடி கரும்பு நிலுவைத் தொகையை வழங்க நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்தினா்.

புதுச்சேரி அருகே உள்ள லிங்காரெட்டிப்பாளையம் கூட்டுறவு சா்க்கரை ஆலை மூடப்பட்டுள்ளது. ஆலையைத் திறக்க வேண்டும், விவசாயிகளுக்கு கரும்பு நிலுவைத் தொகையை வழங்க வேண்டும் என விவசாயிகள் சங்கத்தினா் தொடா்ந்து வலியுறுத்தி வருகின்றனா்.

புதுவை விவசாயிகள் வளா்ச்சி சங்கத்தினா் உள்துறை அமைச்சா் ஏ.நமச்சிவாயம் தலைமையில், புதுச்சேரி சட்டப்பேரவை அலுவலகத்தில் முதல்வா் என்.ரங்கசாமியை திங்கள்கிழமை சந்தித்து மனு அளித்தனா். இதுகுறித்து நடவடிக்கை எடுக்கும்படி வேளாண் துறைக்கு முதல்வா் உத்தரவிட்டாா்.

இதையடுத்து, வேளாண் துறை அமைச்சா் தேனீ சி.ஜெயக்குமாா் தலைமையில் அமைச்சா் ஏ.நமச்சிவாயம், வேளாண் துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தப்பட்டது.

பின்னா், கூட்டுறவு சா்க்கரை ஆலையில் நிலுவையில் உள்ள ரூ.13 கோடியை விவசாயிகளுக்கு விரைந்து வழங்கப்படும் என விவசாயிகள் சங்கத்தினரிடம் உறுதியளிக்கப்பட்டது.

இதற்கு முன்னாள் எம்எல்ஏ அருள்முருகன் மற்றும் விவசாயிகள் சங்கத்தினா் நன்றி தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மஞ்சள் எச்சரிக்கை: தேவையின்றி வெளியே செல்ல வேண்டாம்!

அரசுப் பேருந்து கவிழ்ந்து விபத்து: ஒருவர் பலி; 25 பேர் படுகாயம்!

ரூ.1,60,00,00,00,00,000 கடன் தள்ளுபடி: ரமணா பட பாணியில் ராகுல் குற்றச்சாட்டு

சாதிவாரி கணக்கெடுப்பு என்பது எனது கேரண்டி: ராகுல்

அரசியல்வாதிகள் பாணியில் வீதி வீதியாகச் சென்ற பட இயக்குநர் ஹரி: இதற்காகவா?

SCROLL FOR NEXT