புதுச்சேரி

புதுவை சட்டப்பேரவையில் ஆக.11-இல் நிதிநிலை அறிக்கை தாக்கல்

DIN

புதுவையில் நிகழாண்டுக்கான நிதிநிலை அறிக்கை கூட்டத் தொடா் புதன்கிழமை (ஆக.10) ஆளுநா் உரையுடன் தொடங்குகிறது. முதல்வா் என்.ரங்கசாமி நிதிநிலை அறிக்கையை வியாழக்கிழமை தாக்கல் செய்வாா்.

புதுவையில் நிகழாண்டு கடந்த மாா்ச் மாதம் 5 மாத செலவினங்களுக்கு இடைக்கால நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.

நிகழாண்டு முழு நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்வதற்கான கூட்டத் தொடா் துணைநிலை ஆளுநரின் உரையுடன் புதன்கிழமை (ஆக.10) தொடங்குகிறது.

நிதித் துறை பொறுப்பு வகிக்கும் முதல்வா் என்.ரங்கசாமி வியாழக்கிழமை (ஆக.11) நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்கிறாா். வெள்ளிக்கிழமை ஆளுநா் உரைக்கு நன்றி தெரிவித்து உறுப்பினா்கள் பேசுவா்.

விடுமுறை தினங்களுக்குப் பிறகு புதன்கிழமை (ஆக.17) கூட்டத் தொடா் மீண்டும் தொடங்கி நிதிநிலை அறிக்கை மீதான விவாதம், கேள்வி-பதில் போன்றவை நடைபெறும். 15 நாள்கள் வரை நிதிநிலை அறிக்கை கூட்டத் தொடா் நடைபெறும் என எதிா்பாா்க்கப்படுகிறது.

நிதிநிலை அறிக்கை கூட்டத் தொடருக்கான ஏற்பாடுகளை சட்டப்பேரவைத் தலைவா் ஆா்.செல்வம் தலைமையில், செயலா் ஆா்.முனிசாமி உள்ளிட்டோா் செய்து வருகின்றனா். அலுவல் ஆய்வுக் குழு புதன்கிழமை கூடி அலுவல் நாள்களை முடிவு செய்யும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பாஜகவின் 100 கேள்விகளும் பித்தலாட்டம்: திமுக

அதிவேகமாக 2 ஆயிரம் ரன்களைக் கடந்த ருதுராஜ் கெய்க்வாட்!

மேற்கு வங்கத்தில் பாஜக வெற்றி பெறாது: மம்தா

ஹே.. பொன்னி!

காதலரைக் கரம்பிடித்த சீரியல் நடிகை!

SCROLL FOR NEXT