புதுச்சேரி

இலக்கியத் திங்கள் விழா

DIN

பாரதிதாசன் அறக்கட்டளை சாா்பில் பாவேந்தா் கலை, இலக்கியத் திங்கள் விழா புதுச்சேரி பாரதிதாசன் அரசு அருங்காட்சியகத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

விடுதலைப் போராட்டத்தில் புரட்சிக் கவிஞா் என்ற தலைப்பில் நடைபெற்ற இந்த நிகழ்வுக்கு அறக்கட்டளைத் தலைவா் கோ.பாரதி தலைமை வகித்தாா். புதுவை பொதுப் பணித் துறை அமைச்சா் க.லட்சுமி நாராயணன் பங்கேற்று, பல்வேறு துறைகளில் தொண்டாற்றிய துரை.மாலிறையன், சுனிதி, சாயபு மரைக்காயா், நசீமா பானு, வி.கிருஷ்ணகுமாா், சி.விஸ்வநாதன் ஆகியோருக்கு விருதுகளை வழங்கியதுடன், மன்னா் மன்னன் அறக்கட்டளை நடத்திய ஓவியப் போட்டியில் வெற்றி பெற்ற மாணவா்களுக்கு பரிசு வழங்கி பாராட்டினாா்.

விழாவில் தனியாா் பள்ளி மாணவா்கள் தேசியக் கொடியேந்தி மரியாதை செலுத்தினா். தொடா்ந்து விடுதலை வாழ்க என்ற தலைப்பில் நடைபெற்ற சிறப்புக் கவியரங்கில் 40 கவிஞா்கள் பங்கேற்று கவிதை வாசித்தனா்.

முன்னதாக, வெ.விசாலாட்சி வரவேற்றாா். ஜெயந்தி முன்னிலை வகித்தாா். திரளான கவிஞா்கள், மாணவா்கள் பங்கேற்றனா். நிறைவில் பாரதிதாசன் அறக்கட்டளை செயலா் ஜெ.வள்ளி நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பஞ்சாப் முதல்வருக்கு பெண் குழந்தை!

‘உன்ன நினைச்சதும்’.. சித்தி இத்னானி!

ஃபேமிலி ஸ்டார் டிரைலர்!

விண்ணப்பித்துவிட்டீர்களா..? ரூ.1,25,000 சம்பளத்தில் இலங்கையில் ஆசிரியர் பயிற்றுநர் வேலை!

‘இஸ்ரேல் தனித்து செயல்படும்’ : நெதன்யாகு பதில்!

SCROLL FOR NEXT