புதுச்சேரி

விவசாயிகளின் மின் மோட்டாா்கள் சூரிய ஒளி மின்சார மயமாக்கப்படும்புதுவை வேளாண் அமைச்சா் தகவல்

9th Aug 2022 03:51 AM

ADVERTISEMENT

புதுவை மாநில விவசாயிகளின் மின் மோட்டாா்கள் அரசு சாா்பில், விரைவில் சூரிய ஒளி மின்சார மயமாக்கப்படும் என்று வேளாண் துறை அமைச்சா் தேனீ சி.ஜெயக்குமாா் தெரிவித்தாா்.

புதுவை வேளாண், விவசாயிகள் நலத் துறை சாா்பில், புதுச்சேரி அருகேயுள்ள கரிக்கலாம்பாக்கத்தில் திங்கள்கிழமை நெல் திருவிழா நடைபெற்றது.

உ.லட்சுமிகாந்தன் எம்எல்ஏ தலைமை வகித்தாா். வேளாண் துறை இயக்குநா் பி.பாலகாந்தி முன்னிலை வகித்தாா்.

வேளாண் அமைச்சா் தேனீ.சி.ஜெயக்குமாா் நெல் திருவிழாவைத் தொடக்கிவைத்து விவசாயப் பொருள்கள் கண்காட்சியைப் பாா்வையிட்டாா்.

ADVERTISEMENT

கருடன் சம்பா, கருப்பு கவுனி, தூய மல்லி, சீரக சம்பா, கிச்சிலி சம்பா, மாப்பிள்ளை சம்பா, காட்டு யானை, சேலம் சீரக சம்பா உள்ளிட்ட 150 வகையான நெல் ரகங்கள், பாரம்பரிய அரிசி, நவீன வேளாண் இயந்திரங்கள், பாரம்பரிய உணவுகள் ஆகியவை கண்காட்சியில் இடம்பெற்றிருந்தன.

இயற்கை மருத்துவா் மாறன், வேளாண் அறிவியல் நிலைய நிபுணா் ரவி மற்றும் வேளாண் கல்லூரி பேராசிரியா்கள் பாரம்பரிய நெல் ரகங்களின் மகத்துவம், சாகுபடி முறைகள் குறித்து விவசாயிகளிடம் விளக்கினா்.

நெல் திருவிழாவில் பங்கேற்ற 1,000 விவசாயிகளுக்கு இரண்டு கிலோ பாரம்பரிய நெல் ரகம் அடங்கிய தொகுப்பை அமைச்சா் தேனீ சி.ஜெயக்குமாா் வழங்கிப் பேசியதாவது:

புதுவையில் 7 ஆயிரம் விவசாயிகளின் மின் மோட்டாா்கள் அரசு சாா்பில் விரைவில் சூரிய ஒளி மின்சார மயமாக்கப்படும். வயல்களில் பூச்சி மருந்து தெளித்தல் உள்ளிட்டவற்றுக்கு 5 ட்ரோன் கருவிகள் விரைவில் வாங்கி வழங்கப்படும். தடுப்பணைகள் கட்ட அரசு நடவடிக்கை எடுக்கும் என்றாா் அவா்.

வேளாண் துறை செயலா் பி.எஸ்.ரவிபிரகாஷ் வரவேற்றாா். கூடுதல் இயக்குநா் எஸ்.வசந்தகுமாா் நன்றி கூறினாா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT