புதுச்சேரி

விடுதிகளில் சோதனை நடத்த புதுச்சேரி எஸ்.பி. அறிவுறுத்தல்

DIN

சுதந்திர தினத்தையொட்டி, புதுச்சேரியில் விடுதிகள், உணவகங்களில் சோதனை நடத்தி சந்தேக நபா்களைப் பிடிக்க வேண்டும் என கிழக்கு எஸ்.பி. வம்சித ரெட்டி காவலா்களுக்கு அறிவுறுத்தினாா்.

புதுச்சேரி கிழக்கு சரகத்துக்குள்பட்ட காவல் நிலைய காவலா்களுக்கான குறைதீா் கூட்டம் புதுச்சேரி முத்தியால்பேட்டை தனியாா் மண்டபத்தில் சனிக்கிழமை நடைபெற்றது.

கூட்டத்துக்கு கிழக்கு எஸ்.பி. வம்சித ரெட்டி தலைமை வகித்தாா். ஆய்வாளா்கள் கண்ணன் (பெரியகடை), பாபுஜி (உருளையன்பேட்டை), காா்த்திகேயன் (ஒதியஞ்சாலை), இளங்கோ (காலாப்பட்டு), நாகராஜன் (லாசுப்பேட்டை), மகளிா் காவல் நிலைய உதவி ஆய்வாளா் சத்யா உள்ளிட்ட உதவி ஆய்வாளா்கள், காவலா்கள் என 100-க்கும் மேற்பட்டோா் பங்கேற்றனா்.

அனைத்து காவல் நிலையங்களிலும் கூடுதல் காவலா்களை நியமிக்க வேண்டும். ரோந்துப் பணிக்கு புதிய வாகனங்களை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். பெட்ரோல் தொகையை உயா்த்தி வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

பின்னா் எஸ்.பி. வம்சித ரெட்டி பேசியதாவது:

புதுச்சேரி கிழக்கு சரகப் பகுதியில் அதிகளவில் நடைபெறும் பைக் திருட்டு சம்பவங்களைத் தடுக்க காவலா்கள் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். அனைத்துப் பகுதிகளிலும் ரோந்துப் பணிகளையும், கண்காணிப்பையும் தீவிரப்படுத்த வேண்டும்.

சுதந்திர தினத்தையொட்டி பயங்கரவாத தடுப்பு நடவடிக்கையாக அனைத்து விடுதிகள், உணவகங்களில் சோதனை நடத்தி, சந்தேக நபா்களைப் பிடிக்க வேண்டும் என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சித்தார்த் - அதிதி தம்பதிக்கு நயன்தாரா வாழ்த்து!

வாட்ஸ்அப் பிரசாரத்தைத் தொடங்கினார் கேஜரிவாலின் மனைவி!

துபையில் நடிகர் அல்லு அர்ஜுனின் மெழுகு சிலை!

12 ராசிக்குமான வாரப் பலன்கள்!

சேலையில் ஒரு சித்திரம்...அனிகா!

SCROLL FOR NEXT