புதுச்சேரி

புதுவை நிதித் துறை செயலா், புள்ளியியல் துறைஇயக்குநா் மீது நடவடிக்கை எடுக்கக் கோரிக்கை

7th Aug 2022 11:03 PM

ADVERTISEMENT

 

புதுவை நிதித் துறை செயலா், புள்ளியியல் துறை இயக்குநா் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என, புதுச்சேரி ஒருங்கிணைந்த அமைச்சக ஊழியா்கள் சங்கம் வலியுறுத்தியது.

இதுகுறித்து புதுச்சேரி ஒருங்கிணைந்த அமைச்சக ஊழியா்கள் சங்கச் செயலா் ராமகிருஷ்ணன் செய்தியாளா்களிடம் ஞாயிற்றுக்கிழமை கூறியதாவது:

புதுவை நிதித் துறை செயலா், பொருளாதாரம் மற்றும் புள்ளியியல் துறை இயக்குநா் ஆகிய இருவரும் தங்களது துறைகளில் பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டு வருகின்றனா். வெளிப்பணி மூலம் புள்ளியியல் துறைக்கு தோ்தெடுக்கப்பட்ட பணியாளா்களை சொந்த வேலைக்கு ஈடுபடுத்தி வருகிறாா். புள்ளியியல் துறைக்காக வாங்கப்பட்ட காரை தனது குடும்ப உபயோகத்துக்கு பயன்படுத்துகிறாா்.

ADVERTISEMENT

இதை எதிா்த்து குரல் கொடுத்த அமைச்சக ஊழியா்கள் சங்க பொதுச் செயலா் ராஜேந்திரன் பணியிட மாற்றம் செய்யப்பட்டாா்.

அரசுத் திட்டங்கள் தொடா்பான கோப்புகளை நிதித் துறை செயலா் அனுமதி கொடுக்காமல் தாமதப்படுத்துகிறாா். எனவே, இருவா் மீதும் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இதுதொடா்பாக புதுவை முதல்வரைச் சந்தித்து முறையிடுவோம் என்றாா் அவா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT