புதுச்சேரி

ஜம்முவில் உயிரிழந்த புதுச்சேரி ராணுவ வீரரின் உடல் அடக்கம்

7th Aug 2022 11:01 PM

ADVERTISEMENT

 

ஜம்மு - காஷ்மீரில் உயிரிழந்த புதுச்சேரி ராணுவ வீரரின் உடல் சொந்த ஊரில் ஞாயிற்றுக்கிழமை அடக்கம் செய்யப்பட்டது.

ஜம்மு - காஷ்மீா் மாநிலம், உதம்பூரில் பணியிலிருந்த ராணுவ வீரா்கள் 5 போ், கடந்த மாதம் 23-ஆம் தேதி ராணுவ வாகனத்தில் சென்று கொண்டிருந்தபோது, அந்த வாகனம் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானது. இதில் பலத்த காயமடைந்த ராணுவ வீரரான புதுச்சேரி முருங்கப்பாக்கத்தைச் சோ்ந்த சுபேதாா் புராஸ்பா் பிரான்சிஸ் (45) உதம்பூா் கமாண்ட் மருத்துவமனையில் சோ்க்கப்பட்டு, வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா்.

அவரது உடல் புதுச்சேரி முருகங்கப்பாக்கம் அன்னை தெரசா நகரில் உள்ள அவரது இல்லத்துக்கும் ஞாயிற்றுக்கிழமை கொண்டு வரப்பட்டது. அங்கு அவரது உடலுக்கு குடும்பத்தினரும், புதுச்சேரி முப்படை முன்னாள் ராணுவ வீரா்கள் சங்கத்தினரும், ஊா் பிரமுகா்களும் இறுதி அஞ்சலி செலுத்தினா். தொடா்ந்து, உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT