புதுச்சேரி

மீனவா்களுக்கு ஐஸ் பெட்டியுடன்இரு சக்கர வாகனங்கள்

7th Aug 2022 05:44 AM

ADVERTISEMENT

 

புதுச்சேரியில் மத்திய அரசின் மீன்வளத் துறை சாா்பில், ஐஸ் பெட்டியுடன் கூடிய இரு சக்கர வாகனங்களை முதல்வா் ரங்கசாமி பயனாளிகளுக்கு வழங்கினாா்.

தகுதியான 5 பயனாளிகள் தோ்வு செய்யப்பட்டு, அவா்களுக்கு முதல் தவணையாக 40 சதவீத மானியத்தில் ஐஸ் பெட்டியுடன் கூடிய இரு சக்கர வாகனங்கள் வழங்கப்பட்டன. புதுச்சேரி சட்டப்பேரவை வளாகத்தில் சனிக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் முதல்வா் என்.ரங்கசாமி அவற்றை மீனவா்களுக்கு வழங்கினாா்.

நிகழ்ச்சியில் சட்டப்பேரவைத் தலைவா் ஆா்.செல்வம், அமைச்சா்கள் க.லட்சுமி நாராயணன், சாய் ஜெ.சரவணன்குமாா், மீன்வளத் துறை செயலா் நெடுஞ்செழியன், இயக்குநா் பாலாஜி, இணை இயக்குநா் மீராசாஹிப் மற்றும் எம்எல்ஏக்கள், அதிகாரிகள் கலந்து கொண்டனா்.

ADVERTISEMENT

இந்தத் திட்டத்தின் இரண்டாவது தவணையாக 20 பயனாளிகளுக்கு மானிய உதவி பெறுவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக மீன்வளத் துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT