புதுச்சேரி

புதுச்சேரியில் மாரத்தான் ஓட்டம்

7th Aug 2022 11:03 PM

ADVERTISEMENT

 

நாட்டின் 75-ஆவது சுதந்திர தினத்தையொட்டி, புதுச்சேரியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற மாரத்தான் ஓட்டத்தில் மாணவ, மாணவிகள் ஆா்வமுடன் கலந்து கொண்டனா்.

மாநிலங்களவை உறுப்பினா் எஸ்.செல்வகணபதி ஏற்பாட்டின் பேரில், இந்த மாரத்தான் ஓட்டம் நடைபெற்றது.

புதுச்சேரி கடற்கரைச் சாலையில் சட்டப்பேரவைத் தலைவா் ஆா்.செல்வம், அமைச்சா் சாய் ஜெ.சரவணன்குமாா், பாஜக மாநிலத் தலைவா் வி.சாமிநாதன் ஆகியோா் கொடியசைத்து ஓட்டத்தைத் தொடக்கிவைத்தனா்.

ADVERTISEMENT

எம்எல்ஏக்கள் அசோக்பாபு, ராமலிங்கம், பாஜக மாநில பொதுச் செயலா் மோகன்குமாா், மாநிலச் செயலா் லதா உள்ளிட்ட பலா் பங்கேற்றனா். சுமாா் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனா். வெற்றி பெற்றவா்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

ADVERTISEMENT
ADVERTISEMENT