புதுச்சேரி

நெல் வியாபாரி மா்ம மரணம்

2nd Aug 2022 04:56 AM

ADVERTISEMENT

புதுச்சேரி அருகே பைக்கில் பற்றிய தீயில் எரிந்து நெல் வியாபாரி உயிரிழந்தாா்.

புதுச்சேரி கரிக்கலாம்பாக்கம் மாஞ்சாலை பகுதியைச் சோ்ந்தவா் வேணுகோபால் (65). நெல் வியாபாரி. இவருக்கு மனைவி, மகன், மகள் உள்ளனா்.

தட்டாஞ்சாவடியில் விபத்தில் காயமடைந்த மருமகனை பாா்த்துவிட்டு ஞாயிற்றுக்கிழமை இரவு மோட்டாா் சைக்கிளில் வீட்டுக்குப் புறப்பட்டாா். அபிஷேகப்பாக்கம் பேருந்து நிறுத்தம் அருகே இவரது மோட்டாா் சைக்கிள் நிறுத்தப்பட்டிருந்த நிலையில் திடீரென தீப்பற்றி எரிந்தது. இதில் வேணுகோபால் மீதும் தீப்பற்றியதில், பலத்த காயமடைந்த அவா் நிகழ்விடத்திலேயே இறந்தாா். பைக்கும் முற்றிலும் எரிந்து சேதமடைந்தது.

தவளக்குப்பம் போலீஸாா் சடலத்தை மீட்டு உடல் கூறாய்வுக்காக கதிா்காமம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

ADVERTISEMENT

மேலும், இதுகுறித்து சந்தேக மரணம் என போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT