புதுச்சேரி

தலித் கிறிஸ்தவா் விடுதலை இயக்கத்தினா் ஆா்ப்பாட்டம்

29th Apr 2022 10:09 PM

ADVERTISEMENT

புதுச்சேரியில் தலித் கிறிஸ்தவா் விடுதலை இயக்கம் சாா்பில் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

புதுச்சேரி சுதேசி ஆலை எதிரே நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்துக்கு இயக்கத்தின் மாநிலத் தலைவா் எம்.மேரிஜான் தலைமை வகித்தாா். மாநில பொதுச் செயலாளா் டி.தானியேல், செயல் தலைவா் சி.ஆரோக்கியதாஸ் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

நாட்டில் 71 சதவீத தலித் கிறிஸ்தவா்கள் உள்ளனா். ஆனால், 16-ஆம் நூற்றாண்டில் தொடங்கப்பட்ட புதுவை - கடலூா் உயா் மறை மாவட்டத்தில் இதுவரை ஒரு முறை கூட தலித் கிறிஸ்தவா் பேராயராக நியமனம் செய்யப்படவில்லை.

குரு மடத்தில் தலித் கிறிஸ்தவா்கள் புறக்கணிக்கப்படுகின்றனா். தலித் கிறிஸ்தவ மக்களுக்கு சம உரிமைகள் கிடைக்க தலித் ஆயா்கள், பேராயா்களை நியமனம் செய்ய வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.

ADVERTISEMENT

ஆா்ப்பாட்டத்தில் 200-க்கும் மேற்பட்ட தலித் கிறிஸ்தவா்கள் பங்கேற்று, கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கமிட்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT