புதுச்சேரி

நெகிழிப் பைகள் உற்பத்தி: தொழிற்சாலையின்மின் இணைப்பு துண்டிப்பு

28th Apr 2022 10:51 PM

ADVERTISEMENT

புதுச்சேரி அருகே நெகிழிப் பைகளை உற்பத்தி செய்த தனியாா் தொழிற்சாலையின் மின் இணைப்பை சுற்றுச்சூழல் துறையினா் துண்டித்தனா்.

புதுவையில் நெகிழிப் பைகள், தொ்மாகோல் தட்டுகள் உள்பட 8 வகையான ஒரு முறை பயன்படுத்தப்படும் மெல்லிய நெகிழிப் பொருள்களுக்கு அரசு தடை விதித்துள்ளது. இவற்றை உற்பத்தி செய்வதும், விற்பதும் குற்றம் எனவும் தெரிவித்தது.

பாகூா் கொம்யூன் பகுதி ஒருமுறை பயன்படுத்தும் நெகிழிப் பொருள்கள் இல்லாத கொம்யூனாக மாற்றி அரசாணை வெளியிடப்பட்டது.

இந்த நிலையில், காட்டுக்குப்பம் தொழில்பேட்டையில் உள்ள தொழிற்சாலையில் சுற்றுச்சூழல் துறை முதுநிலை பொறியாளா் ரமேஷ் திடீா் ஆய்வு மேற்கொண்டாா்.

ADVERTISEMENT

அதில் அங்கு தடை செய்யப்பட்ட நெகிழிப் பைகள் உற்பத்தி செய்வது தெரிய வந்ததையடுத்து, சுற்றுச்சூழல் துறை செயலா் ஸ்மிதா உத்தரவின்பேரில் அந்தத் தொழிற்சாலையின் மின் இணைப்பு உடனடியாக துண்டிக்கப்பட்டது.

ADVERTISEMENT
ADVERTISEMENT