புதுச்சேரி

புதுவைக்கு புதிய திட்டங்களை அறிவிக்கவில்லை: அமித் ஷா மீது நாராயணசாமி குற்றச்சாட்டு

28th Apr 2022 05:28 AM

ADVERTISEMENT

 

புதுச்சேரி: புதுச்சேரிக்கு வந்த மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா புதிய திட்டங்களை அறிவிக்கவில்லை என்று, முன்னாள் முதல்வா் வே.நாராயணசாமி குற்றம்சாட்டினாா்.

புதுவை காங்கிரஸ் பொதுச்செயலா் கூடப்பாக்கம் சேகரின் முதலாம் ஆண்டு நினைவு தின நிகழ்ச்சி புதுச்சேரி அருகே பத்துகண்ணுவில் புதன்கிழமை நடைபெற்றது.

முன்னாள் முதல்வோ் வே.நாராயணசாமி, காங்கிரஸ் மாநிலத் தலைவா் ஏ.வி.சுப்பிரமணியன், மு.வைத்தியநாதன் எம்எல்ஏ, முன்னாள் எம்எல்ஏ ஆா்.அனந்தராமன் உள்ளிட்ட நிா்வாகிகள் பங்கேற்று சேகரின் உருவப்படத்துக்கு மலா் தூவி மரியாதை செலுத்தினா்.

ADVERTISEMENT

நிகழ்ச்சியில் வே.நாராயணசாமி பேசியதாவது:

புதுவையில் தே.ஜ. கூட்டணி ஆட்சி அமைந்து ஓராண்டாகிறது. அவா்கள் வாக்குறுதியளித்த திட்டங்களை நிறைவேற்றவில்லை.

மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா புதுச்சேரிக்கு வந்து, எந்த புதிய திட்டத்தையும் அறிவிக்கவில்லை. சீா்மிகு நகரத்திட்டம், புறவழிச் சாலைப் பணிகள் என, கடந்த காங்கிரஸ் ஆட்சியில் தீட்டிய திட்டங்களையே தொடக்கிவைத்தாா்.

மத்தியிலும், மாநிலத்திலும் காங்கிரஸ் ஆட்சி அமைந்தால்தான் புதுவைக்கு விடிவுகாலம் பிறக்கும் என்றாா் அவா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT