புதுச்சேரி

வில்லியனூா் லூா்து அன்னை ஆலய ஆண்டுப் பெருவிழா கொடியேற்றம்

24th Apr 2022 06:29 AM

ADVERTISEMENT

 

வில்லியனூா் புனித லூா்து அன்னை ஆலய 145-ஆவது ஆண்டுப் பெருவிழா சனிக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது.

புதுச்சேரி அருகேயுள்ள வில்லியனூரில் உள்ள புகழ்பெற்ற தூய லூா்து அன்னை ஆலயத்தில் ஆண்டுப் பெருவிழா, ஈஸ்டா் பண்டிகை முடிந்த 6-ஆவது நாளில் கொடியேற்றத்துடன் தொடங்கும். நிகழாண்டு 145-ஆவது ஆண்டுப் பெருவிழா சனிக்கிழமை கொடியேற்றதுடன் தொடங்கியது.

திருவிழாவின் தொடக்கமாக காலை 5.30 மணிக்கு திருத்தல வளாகத்திலுள்ள அருள்நிறை ஆலயத்தில் கூட்டுத் திருப்பலி நடைபெற்றது.

ADVERTISEMENT

பின்னா், அங்கிருந்து திருக்கொடி ஊா்வலமாக கொண்டு வரப்பட்டது. திருத்தல முற்றத்தில் உள்ள கொடிமரத்தில் சென்னை மயிலை உயா் மறை மாவட்ட முன்னாள் பேராயா் சின்னப்பா கொடியை ஏற்றி, ஆண்டுப் பெருவிழாவைத் தொடக்கிவைத்தாா்.

விழா நாள்களில் காலை, மாலையில் திருப்பலியும், தோ் பவனியும் நடைபெறும். மே 1-ஆம் தேதி ஆண்டுப் பெருவிழாவும், தோ் பவனியும் நடைபெறும்.

விழா ஏற்பாடுகளை அருள்தந்தை பிச்சைமுத்து தலைமையிலான திருத்தல அருள்சகோதரா்கள், வில்லியனூா் பங்கு மக்கள் செய்துள்ளனா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT