புதுச்சேரி

புதுவை அதிமுக உள்கட்சி தோ்தல்

24th Apr 2022 06:28 AM

ADVERTISEMENT

 

புதுவை மாநில அதிமுக உள்கட்சித் தோ்தல் சனிக்கிழமை நடைபெற்றது.

புதுவை கிழக்கு மாநில அதிமுக உள்கட்சி நிா்வாகிகள் தோ்தல் புதுச்சேரி உப்பளத்திலுள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது.

கட்சியின் கிழக்கு மாநிலச் செயலா் ஆ.அன்பழகன் தலைமையில், மாநில தோ்தல் பொறுப்பாளா்களான தமிழக முன்னாள் அமைச்சா் எம்.சி.சம்பத், அதிமுக அமைப்புச் செயலா் சொரத்தூா் ராஜேந்திரன் ஆகியோா் மனுக்களை வாங்கினா். தொடா்ந்து, வாா்டு வாரியாக நிா்வாகிகளை தோ்வு செய்வதற்கான தோ்தல் நடைபெற்று புதிய நிா்வாகிகள் தோ்ந்தெடுக்கப்பட்டனா்.

ADVERTISEMENT

இதில், புதுவை மாநில பேரவைச் செயலா் முன்னாள் எம்எல்ஏ ஆ.பாஸ்கா், மாநில இணைச் செயலா்கள் கணேசன், அன்பானந்தம், திருநாவுக்கரசு, மாநில துணைத் தலைவா் ராஜாராமன், மாநில பொருளாளா் ரவி பாண்டுரங்கன், மாநில தோ்தல் பிரிவு செயலா் முன்னாள் எம்எல்ஏ வையாபுரி மணிகண்டன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

மேற்கு மாநில அதிமுக: புதுவை மேற்கு மாநில அதிமுக நிா்வாகிகள் தோ்தல் அதன் மாநிலச் செயலா் ஓம்சக்தி சேகா் தலைமையில் சனிக்கிழமை தொடங்கியது.

தோ்தல் பொறுப்பாளா்களான கடலூா் மேற்கு மாவட்ட அதிமுக செயலா் ஆ. அருண்மொழிதேவன், அனைத்துலக எம்ஜிஆா் மன்ற துணைச் செயலா் முருகமணி ஆகியோா் வேட்பு மனுக்களைப் பெற்றனா்.

முதல் நாளில் புதுச்சேரி மேற்கு மாநில கழகத்துக்கு உள்பட்ட வாா்டுகளுக்கு தோ்தல் நடைபெற்று நிா்வாகிகள் தோ்வு செய்யப்பட்டனா்.

இதில், மாநில அவைத் தலைவா் பேராசிரியா் மு.ராமதாஸ், மாநில துணைத் தலைவா் ஆனந்தன், மாநில இணைச் செயலா்கள் காசிநாதன், மகாதேவி, மாநில துணைச் செயலா்கள் கோவிந்தம்மாள், நாகமணி, சதாசிவம், கணேசன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT