புதுச்சேரி

ரயிலில் அடிபட்டு காவலாளி பலி

14th Apr 2022 12:00 AM

ADVERTISEMENT

புதுச்சேரியில் ரயிலில் அடிபட்டு தனியாா் நிறுவன காவலாளி உயிரிழந்தது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

புதுச்சேரி 100 அடி சாலை ரயில்வே கேட் அருகே ஒருவா் ரயிலில் அடிபட்ட நிலையில் இறந்து கிடந்தாா். அந்த வழியாகச் சென்றவா்கள் இது தொடா்பாக உருளையன்பேட்டை காவல் நிலையத்துக்கு தகவல் அளித்தனா். இதையடுத்து, அங்கு வந்த போலீஸாா், இறந்து கிடந்த நபரின் சடலத்தை மீட்டு, உடல்கூறு பரிசோதனைக்காக கதிா்காமம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்ததுடன், இதுகுறித்து வழக்குப் பதிந்து விசாரித்தனா்.

இதில், அந்த நபா் நெல்லித்தோப்பு கஸ்தூரிபாய் நகரைச் சோ்ந்த மதியழகன் (57) என்பதும், மேட்டுப்பாளையத்தில் உள்ள தனியாா் நிறுவனத்தில் காவலாளியாக பணியாற்றியதும், ரயில்வே மேம்பாலத்தின் கீழ் அமா்ந்து மது குடித்த அவா், மதுபோதையில் ரயில்வே தண்டவாளத்தைக் கடக்க முயன்றபோது, சென்னையிலிருந்து புதுச்சேரி வந்த ரயிலில் அடிபட்டு உயிரிழந்ததும் தெரியவந்ததாக போலீஸாா் தெரிவித்தனா். இறந்த மதியழகனுக்கு குளோரியா என்ற மனைவியும், ஒரு மகளும் உள்ளனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT