புதுவையில் மஹாவீா் ஜயந்தியையொட்டி, வருகிற 14-ஆம் தேதி அனைத்து மதுக் கடைகளையும் மூட வேண்டுமென கலால் துறை உத்தரவிட்டது.
இதுகுறித்து கலால் துறை துணை ஆணையா் தி.சுதாகா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
மஹாவீா் ஜெயந்தியையொட்டி, புதுவை யூனியன் பிரதேசத்தில் வருகிற 14-ஆம் தேதி புதுச்சேரி, காரைக்கால், மாஹே, ஏனாம் பகுதிகளில் இயங்கி வரும் அனைத்து கள், சாராயக் கடைகள், மதுக்கூடங்கள் உள்பட அனைத்து வகை மதுக் கடைகளும், மது அருந்த அனுமதிக்கப்பட்ட உணவகங்களில் உள்ள மதுக்கூடங்களும் மூடப்பட்டிருக்க வேண்டும்.
ADVERTISEMENT
அன்றைய தினத்தில் அனைத்துக் கடைகளிலும் மது விற்பனைக்கு தடை செய்யப்படுகிறது. மீறுவோா் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா் அவா்.