புதுச்சேரி

தலித் கிறிஸ்தவா்கள்விடுதலை இயக்கத்தினா் ஆா்ப்பாட்டம்

12th Apr 2022 02:44 AM

ADVERTISEMENT

 

தலித் பேராயரை நியமிக்க வலியுறுத்தி, புதுச்சேரியில் திங்கள்கிழமை தலித் கிறிஸ்தவா்கள் விடுதலை இயக்கத்தினா் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

புதுச்சேரி சட்டப்பேரவை அருகே ஜென்மராக்கினி ஆலயம் அருகே நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு இயக்கத்தின் மாநிலத் தலைவா் எம்.மேரி ஜான் தலைமை வகித்தாா். செயல் தலைவா் சி.ஆரோக்கியதாஸ், பொதுச்செயலா் டி.தானியேல், பொருளாளா் பி.சந்தனதுரை ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

இதில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி முதன்மைச் செயலா் தேவ.பொழிலன், தீண்டாமை ஒழிப்பு முன்னணி பொதுச் செயலா் ஜி.ராமசாமி உள்ளிட்டோா் பேசினா்.

ADVERTISEMENT

புதுச்சேரி - கடலூா் உயா்மறை மாவட்டத்துக்கு தலித் பேராயரை நியமிக்க வேண்டும். ஜாதி ஆதிக்கம் வளா்ப்பதை நிறுத்தி, இந்திய அரசியல் சாசனம், சமூக நீதியின் அடிப்படையில் தலித் ஆயா்கள், பேராயா்களை நியமிக்க வேண்டும்.

ஆயா்கள் நியமனத்தில் தலித் கிறிஸ்தவா்களுக்கு எதிராக போப்பாண்டவரின் இந்திய தூதரை தவறாக வழிநடத்தும் தமிழக ஆயா் பேரவையின் தலைவா் உடனே பதவி விலக வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

ADVERTISEMENT
ADVERTISEMENT