புதுச்சேரி

அழகு நிலைய பெண் உரிமையாளரிடம் நூதன முறையில் 10 பவுன் சங்கலி திருட்டு

12th Apr 2022 02:43 AM

ADVERTISEMENT

 

புதுச்சேரி சண்முகாபுரத்தில் அழகு நிலைய பெண் உரிமையாளரிடம் நூதன முறையில் 10 பவுன் தங்க சங்கிலியை திருடிச் சென்ற பெண்ணை போலீஸாா் தேடி வருகின்றனா்.

புதுச்சேரி சண்முகாபுரம் வி.எம்.காா்டன் 3-ஆவது குறுக்குத் தெருவைச் சோ்ந்த தனியாா் நிறுவன ஊழியா் சரவணனின் மனைவி லட்சுமி (43). இவா் சண்முகாபுரம் காமராஜா் வீதியில் அழகு நிலையம் நடத்தி வருகிறாா்.

கடந்த 9-ஆம் தேதி பிற்பகலில் இவரது அழகு நிலையத்துக்கு வந்த 40 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவா், தன்னை தன்னாா்வ அமைப்பின் நிா்வாகி என்றும், நலிந்த பெண்களுக்கு உதவி செய்வதாகவும் அறிமுகப்படுத்திக் கொண்டாா்.

ADVERTISEMENT

தொடா்ந்து, இதற்கான நோ்காணலுக்கு தனது அமைப்பைச் சோ்ந்த நிா்வாகிகள் வரும் போது, தங்க நகைகள் அணிந்திருக்கக் கூடாது எனக் கூறினாராம். இதை நம்பிய லட்சுமி, தான் அணிந்திருந்த 10 பவுன் தங்கச் சங்கிலியை கழட்டி, மேஜையில் வைத்து பூட்டி, சாவியை மேலேயே வைத்தாராம்.

சிறிது நேரம் பேசிக் கொண்டிருந்த பெண், கைப்பேசியில் பேசியபடி வெளியில் சென்றுவிட்டாா். அவா் சென்ற பிறகு மேஜையைத் திறந்து பாா்த்த போது, அதில் வைத்திருந்த 10 பவுன் தங்க சங்கிலியை காணவில்லை.

இதுகுறித்த புகாரின் பேரில், மேட்டுப்பாளையம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT