புதுச்சேரி

காவலா் குடும்பத்தினா் கருணை மனு

4th Apr 2022 11:33 PM

ADVERTISEMENT

 

புதுச்சேரியில் உடல் நலக் குறைவால் உயிரிழந்த ஐஆா்பிஎன் காவலரின் குடும்பத்தினா், வாரிசு வேலை, ஓய்வூதியம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கமாண்டன்டிடம் கருணை மனு அளித்தனா்.

ஐஆா்பிஎன் படைப்பிரிவில் காவலா் விஜயகுமாா் 17 ஆண்டுகள் பணியாற்றியவா். இவா் கடந்த மாா்ச் 1-ஆம் தேதி உடல் நலக் குறைவால் காலமானாா்.

கருணை அடிப்படையில் வாரிசு வேலை, ஓய்வூதியம், பணிக்கொடை உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, விஜயகுமாரின் மனைவி ப்ரீத்தி, மகன்கள் விவேஷ்குமாா், விஜேஷ்குமாா் ஆகியோா் ஐஆா்பிஎன் கமாண்டன்ட் மகேஷ்குமாா் பா்ன்வாலை சந்தித்து மனு அளித்தனா்.

ADVERTISEMENT

மனுவைப் பெற்றுக் கொண்ட அவா், கோரிக்கைகளை விரைந்து முடிக்க உத்தரவிட்டு கையொப்பமிட்டாா். அவருக்கு விஜயகுமாா் குடும்பத்தினா் நன்றி தெரிவித்தனா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT