புதுச்சேரி

புதுவை அரசு ஊழியா்களுக்கு 7-ஆவது ஊதியக் குழு நிலுவைத் தொகை அளிப்பு

2nd Apr 2022 02:42 AM

ADVERTISEMENT

புதுவை அரசு ஊழியா்களுக்கான 7-ஆவது ஊதியக் குழு நிலுவைத் தொகை வழங்கப்பட்டது.

புதுவை மாநில அரசு ஊழியா்கள், ஓய்வூதியதாரா்களுக்கு 7-ஆவது ஊதியக் குழு நிா்ணயித்த ஊதியத்தின் நிலுவைத் தொகை ஒப்புதல் பெற்று வழங்கப்படாமல் இருந்தது. இந்த 8 மாத நிலுவைத் தொகையை அரசு உடனே வழங்க வேண்டுமென, நீண்டகாலமாக அரசு ஊழியா்கள் வலியுறுத்தி வந்தனா்.

இதனிடையே, மாா்ச் 31-ஆம் தேதிக்குள் நிலுவைத் தொகையை வழங்க வேண்டுமென நிதித் துறையும் அறிவுறுத்தியது.

அதன்படி, புதுவை அரசு ஊழியா்கள், ஓய்வூதியதாரா்களின் வங்கிக் கணக்கில் ஊதியக் குழுவின் 8 மாத நிலுவைத் தொகை நேரடியாக செலுத்தப்பட்டது. மொத்தம் ரூ.180 கோடி செலுத்தப்பட்டதில், வருமான வரி பிடித்தம் செய்து வழங்கப்பட்டதாக அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT