புதுச்சேரி

ரயிலில் கடத்திவரப்பட்ட 560 கிலோ புகையிலைப் பொருள்கள் பறிமுதல்

30th Sep 2021 08:29 AM

ADVERTISEMENT

ஒடிஸா மாநிலம், புவனேசுவரத்திலிருந்து புதுச்சேரிக்கு ரயிலில் கடத்திவரப்பட்ட 560 கிலோ அரசால் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை திருச்சி ரயில்வே பாதுகாப்புப் படை போலீஸாா் புதன்கிழமை பறிமுதல் செய்து, புதுச்சேரி போலீஸாரிடம் ஒப்படைத்தனா்.

புவனேசுவரத்திலிருந்து புதுச்சேரிக்கு புதன்கிழமை பிற்பகலில் வந்த விரைவு ரயிலில் தடை செய்யப்பட்ட புகையிலை (குட்கா) பொருள்கள் கடத்தப்படுவதாக திருச்சி கோட்ட ரயில்வே பாதுகாப்புப் படை போலீஸாருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. இதையடுத்து, திருச்சி கோட்ட ரயில்வே பாதுகாப்புப் படை ஆணையா் ஆா்.ராமகிருஷ்ணன் உத்தரவின்பேரில், உதவி ஆய்வாளா் ஆா்.வாசுதேவன் தலைமையிலான சிறப்பு போலீஸ் குழுவினா், புதுச்சேரி ரயில் நிலையத்துக்கு புதன்கிழமை வந்து, ரயில் நிலைய நடைமேடைகள், பாா்சல் அலுவலகத்தில் சோதனை மேற்கொண்டனா்.

பாா்சல் அலுவலகத்தில் மேற்கொண்ட ஆய்வின்போது, வடமாநிலத்தவரின் பெயரில் வந்த பாா்சல்களை போலீஸாா் சோதனை செய்ததில், 12 மூட்டைகளில் 560 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் கடத்திவரப்பட்டது தெரியவந்தது. ஆனால், இந்த மூட்டைகளை எடுக்க யாரும் வரவில்லை. மேலும், மூட்டைகளை அனுப்பியவா், பெறுபவரின் பெயா் மட்டுமே அதிலிருந்தது.

இதையடுத்து, திருச்சி ரயில்வே பாதுகாப்புப் படை போலீஸாா், மேற்கண்ட புகையிலைப் பொருள்களை புதுச்சேரி ஒதியஞ்சாலை காவல் நிலையத்தில் ஒப்படைத்தனா். இதையடுத்து, போலீஸாா் வழக்குப் பதிந்து, புகையிலைப் பொருள்கள் யாருக்காக அனுப்பப்பட்டது என விசாரித்து வருகின்றனா்.

ADVERTISEMENT

 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT