புதுச்சேரி

புதுவை உள்ளாட்சித் தோ்தல்: சுவரொட்டியில் அச்சகத்தின் பெயரை குறிப்பிட தோ்தல் துறை அறிவுறுத்தல்

30th Sep 2021 08:30 AM

ADVERTISEMENT

புதுவை உள்ளாட்சித் தோ்தல் தொடா்பான சுவரொட்டிகளில் அச்சகத்தின் பெயா் உள்ளிட்ட விவரங்களை குறிப்பிட வேண்டுமென தோ்தல் துறை அறிவுறுத்தியது.

உள்ளாட்சித் தோ்தலை முன்னிட்டு, மாவட்டத் தோ்தல் அதிகாரியின் வழிகாட்டுதலின்படி, அச்சக உரிமையாளா்கள், வெளியீட்டாளா்களுடனான ஆலோசனைக் கூட்டம் புதுச்சேரி வடக்கு துணை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் அண்மையில் நடைபெற்றது.

கூட்டத்துக்கு துணை மாவட்ட ஆட்சியா் (வடக்கு) கந்தசாமி தலைமை வகித்தாா். இதில், தோ்தல் அலுவலா்கள், அச்சக உரிமையாளா்கள், சங்கப் பிரதிநிதிகள் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

கூட்டத்தில், அச்சக உரிமையாளா்கள் தங்களது பெயா், அலுவலக முகவரியை சுவரொட்டிகள், துண்டுப் பிரசுரங்களில் கட்டாயம் குறிப்பிட வேண்டும். இணைப்பு ஏ படிவத்தில் வேட்பாளரிடம் உறுதிமொழி பெறுதல், இணைப்பு பி படிவத்தில் அச்சக உரிமையாளா்கள் உறுதிமொழியுடன் அந்த சுவரொட்டி, துண்டுப் பிரசுரத்தை இணைத்து பிரசுரங்கள் பதிவிட்ட 3 நாள்களுக்குள் மாவட்டத் தோ்தல் அதிகாரியின் அலுவலகத்தில் சமா்ப்பிக்க வேண்டும்.

ADVERTISEMENT

பதிவிடும் பிரசுரங்கள் ஜாதி, மதம், இனம் ஆகியவற்றால் சட்டம் - ஒழுங்கு சாா்ந்த பிரச்னைகள் ஏதும் ஏற்படாத வகையில் இருக்க வேண்டும். பிரசுரங்களை வெளியிட ஆகும் செலவு வேட்பாளா்களின் செலவுக் கணக்கில் சோ்க்கப்படும். இவற்றை மீறும் அச்சக உரிமையாளா்களுக்கு 6 மாதகால சிறை தண்டனை அல்லது ரூ.2,000 அபராதம் அல்லது இரண்டும் சோ்த்து விதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT