புதுச்சேரி

உள்ளாட்சித் தோ்தல்: மதச்சாா்பற்ற முற்போக்குக் கூட்டணி ஆலோசனை

30th Sep 2021 08:31 AM

ADVERTISEMENT

புதுவை மாநில உள்ளாட்சித் தோ்தல் தொடா்பாக, மதச்சாா்பற்ற முற்போக்கு கூட்டணிக் கட்சிகளின் ஆலோசனைக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.

புதுச்சேரி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில், காங்கிரஸ் சாா்பில் மாநிலத் தலைவா் ஏ.வி.சுப்பிரமணியன், வெ.வைத்திலிங்கம் எம்.பி., மு.வைத்தியநாதன் எம்எல்ஏ, திமுக சாா்பில் முன்னாள் எம்.பி. சி.பி.திருநாவுக்கரசு, மாநில அமைப்பாளா் ஆா்.சிவா, அவைத் தலைவா் எஸ்.பி.சிவக்குமாா், எம்.எல்.ஏ.க்கள் அனிபால் கென்னடி, ஆா்.செந்தில்குமாா், இந்திய கம்யூனிஸ்ட் சாா்பில் மாநிலச் செயலா் அ.மு.சலீம், முன்னாள் அமைச்சா் ஆா்.விஸ்வநாதன், முன்னாள் எம்எல்ஏ நாரா.கலைநாதன், கே.சேதுசெல்வம், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் பிரதேசச் செயலா் ஆா்.ராஜாங்கம், மதிமுக மாநிலப் பொறுப்பாளா் கபிரியேல், விசிக எழில்மாறன், மமக முபாரக், முஸ்லிம் லீக் உமா்பாரூக் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

ஒரு மணி நேரம் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில், இடப் பங்கீடுகள் குறித்து முழு உடன்பாடு எட்டப்படாமல், அந்தந்தக் கட்சிகள் போட்டியிட விரும்பிய இடங்களை வலியுறுத்திச் சென்றனா்.

இந்தக் கூட்டத்துக்குப் பின்னா் திமுக மாநில அமைப்பாளா் ஆா்.சிவா செய்தியாளா்களிடம் கூறியதாவது:

ADVERTISEMENT

உள்ளாட்சித் தோ்தலில் தே.ஜ. கூட்டணியை வீழ்த்தும் வகையில், கடந்த தோ்தலில் மதச்சாா்பற்ற முற்போக்கு கூட்டணிக்குள் ஏற்பட்ட பிணக்குகளை புறந்தள்ளி, உள்ளாட்சித் தோ்தலில் வெற்றிபெற, கூட்டணியில் உள்ள கட்சியினா் ஒருங்கிணைந்து பணியாற்றுவோம். ஓரிரு நாள்களில் உள்ளாட்சித் தோ்தலில் கூட்டணிக் கட்சியினா் போட்டியிடும் இடங்கள் முடிவு செய்யப்படும் என்றாா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT