புதுச்சேரி

ஜிஎஸ்டி இழப்பீட்டு காலத்தை மேலும் 5 ஆண்டுகள் நீட்டிக்க வேண்டும்: அமைச்சர் க.லட்சுமிநாராயணன் வலியுறுத்தல்

18th Sep 2021 12:43 PM

ADVERTISEMENT


புதுச்சேரி: லக்னௌவில் நடைபெற்ற 45 ஆவது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் புதுச்சேரி அரசு சார்பில் பங்கேற்ற அமைச்சர் க.லட்சுமிநாராயணன், ஜிஎஸ்டி இழப்பீட்டு காலத்தை மேலும் 5 ஆண்டுகள் நீட்டிக்க வேண்டும் என வலியுறுத்தினார்.

இதுகுறித்து ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் அவர் பேசியதாவது:
ஜிஎஸ்டி அமல்படுத்தப்பட்ட பிறகு, அதில் உள்ள சிக்கல்களால், புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.  கடந்த நிதியாண்டில் மட்டும் 62 சதவிகிதம் வரி வருவாய் இழப்பு ஏற்பட்டது.

இந்த வருவாய் இழப்பு மத்திய அரசு தரும் ஜிஎஸ்டி இழப்பீடு மூலம் சரி செய்யப்படுகிறது. ஜிஎஸ்டி இழப்பீடு காலம் ஜூன் 22 இல் முடிவடைந்தால், புதுச்சேரி யூனியன் பிரதேசம் கடும் நிதி நெருக்கடிக்கு ஆளாக நேரிடும். புதுச்சேரி யூனியன் பிரதேசம் இதுவரை மத்திய நிதி ஆணையத்திலும் சேர்க்கப்படவில்லை. அதனால், மத்திய அரசால் பகிர்ந்து தரப்படும் ஆண்டுதோறும் அளிக்கப்படும் நிதி, புதுச்சேரிக்கு தர முடியாமல் போகிறது.

மத்திய உள்துறை அமைச்சகத்தின் நிதி அளவும் ஆண்டுதோறும் குறைந்து வருகிறது. இவைகளை கருத்தில் கொண்டு சிறிய மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கான ஜிஎஸ்டி காலம் ஜூன் 22 பிறகு மேலும் 5 ஆண்டுகள் கால நீட்டிப்பு செய்ய வேண்டும்.

ADVERTISEMENT

பெட்ரோல், டீசலை ஜிஎஸ்டி வரம்புக்குள் கொண்டுவரப்பட்டால், புதுச்சேரிக்கு வருவாய் பாதிக்கப்படும். இதனைக் கருத்தில் கொண்டு மத்திய அரசு செயல்படுத்த வேண்டும் என அமைச்சர் க.லட்சுமிநாராயணன் வலியுறுத்தி உள்ளார்.

Tags : GST compensation extended Minister K. Lakshminarayanan
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT