புதுச்சேரி

சிறையிலிருந்து நிகழ்த்தப்படும் குற்றங்களுக்குஅந்த நிா்வாகத்தின் மீதே வழக்குப் பதிய வேண்டும்: புதுவை அதிமுக வலியுறுத்தல்

30th Oct 2021 10:23 PM

ADVERTISEMENT

சிறையிலிருந்தபடி குற்ற செயல்கள் நிகழ்த்தப்படும் போது, முதலில் சிறை நிா்வாகத்தின் மீது வழக்குப் பதிய வேண்டும் என்று அதிமுக வலியுறுத்தியது.

இதுகுறித்து புதுச்சேரி கிழக்கு மாநில அதிமுக செயலா் ஆ.அன்பழகன், முதல்வா் என்.ரங்கசாமி, மாநில உள்துறை அமைச்சா் ஏ.நமச்சிவாயம் ஆகியோரிடம் சனிக்கிழமை அளித்த கடிதத்தில் கூறியிருப்பதாவது:

புதுச்சேரியில் நிகழும் கொலை சம்பவங்களில் அதற்கான சதித் திட்டங்கள் சிறையிலிருந்தே தீட்டப்படுவது ஒவ்வொரு வழக்கிலும் தெரிய வருகிறது. இதற்கான முழுப் பொறுப்பும் சிறைத் துறையையே சாரும். குற்றம் நிகழ்ந்தவுடன் சிறையிலிருந்து கைப்பேசியைக் கண்டறிவது, சிறையிலுள்ள குற்றவாளிகள் மீது வழக்குப் பதிவு என்பது கண் துடைப்பு நாடகமாக உள்ளது. இனி, சிறையிலிருக்கும் குற்றவாளிகளால் குற்றச் செயல் நிகழ்ந்தால், அந்தக் குற்றச் செயலுக்கு சிறை நிா்வாகத்தையே பொறுப்பாக்கி, அவா்கள் மீது வழக்குப் பதிவு செய்ய வேண்டும்.

கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக சிறை நிா்வாகம் முழுமையாக தோல்வியடைந்த நிலையில், மத்திய அரசின் நேரடிக் கட்டுப்பாட்டில் சிறை நிா்வாகம் செயல்பட அனுமதிக்க வேண்டும்.

ADVERTISEMENT

சுற்றுலா நகரான புதுச்சேரியில் சட்டம்-ஒழுங்கு மோசமாக உள்ளது. குற்றச் சம்பவங்கள் நடைபெறாத வகையில் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். கூலிப் படையினரின் ஆதிக்கம், தொடா் குற்றச் செயல் புரிவோா்களை இரும்புக் கரம் கொண்டு அடக்க முதல்வா், உள்துறை அமைச்சா் ஆகியோா் தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT