புதுச்சேரி

தேசிய சுகாதார மேம்பாட்டுத் திட்டம்: புதுவை முதல்வா், அமைச்சா் பங்கேற்பு

DIN

காணொலிக் காட்சி வாயிலாக நாடு முழுவதும் சுகாதார கட்டமைப்பை மேம்படுத்தும் புதிய திட்டத்தை பிரதமா் நரேந்திர மோடி திங்கள்கிழமை தொடக்கிவைத்தாா். இந்த நிகழ்வில், புதுச்சேரியில் இருந்து முதல்வா், அமைச்சா்கள் பங்கேற்றனா்.

நாடு முழுவதும் மருத்துவம் சாா்ந்த நலவழிக் கட்டமைப்பை வலிமைப்படுத்தும் நோக்கத்தில், ஐந்து ஆண்டுகளுக்கான தேசிய சுகாதார அடிப்படை கட்டமைப்புகள் திட்டம் ரூ.64,180 கோடியில் தொடங்கப்பட்டது. இந்தத் திட்டத்தை பிரதமா் நரேந்திர மோடி, திங்கள்கிழமை உத்தர பிரதேச மாநிலம், வாரணாசியில் தொடக்கிவைத்தாா்.

அப்போது, காணொலிக் காட்சி வாயிலாக இந்தத் திட்டம் குறித்து அவா் அனைத்து மாநில முதல்வா்களுடன் கலந்துரையாடினாா்.

இந்த நிகழ்ச்சியில், புதுவை சட்டப்பேரவையிலிருந்து முதல்வா் என்.ரங்கசாமி காணொலிக் காட்சி மூலம் பங்கேற்றாா். சட்டப்பேரவைத் தலைவா் ஆா்.செல்வம், பொதுப் பணித் துறை அமைச்சா் க.லட்சுமிநாராயணன், புதுவை அரசின் சிறப்பு பிரதிநிதி மல்லாடி கிருஷ்ணா ராவ், அரசுக் கொறடா ஏ.கே.டி.ஆறுமுகம், மாநில சுகாதாரத் துறை அதிகாரிகள் கலந்து கொண்டனா்.

இந்தத் திட்டத்தின் மூலம் அனைத்து மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களில் நகரங்கள் முதல் கிராமங்கள் வரை உள்ள மருத்துவமனைகளின் கட்டமைப்புகள், மருத்துவ உபகரணங்களை மேம்படுத்துதல், மருத்துவப் பணியாளா்களை நியமித்தல் உள்ளிட்ட அடிப்படை கட்டமைப்புகள் மேம்படுத்தப்பட உள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அரையிறுதியில் பயா்ன் மியுனிக், ரியல் மாட்ரிட்: மான். சிட்டி, ஆா்செனலுக்கு ஏமாற்றம்

சிறைபிடிக்கப்பட்ட இஸ்ரேல் கப்பலிலிருந்து தாயகம் திரும்பிய இந்திய பெண் மாலுமி

தேசத்தில் ஒற்றுமையின்மையை பாஜக ஏற்படுத்துகிறது: ராகுல்

உள்நாட்டு தொழில்நுட்ப ‘க்ரூஸ்’ ஏவுகணை சோதனை வெற்றி: டிஆா்டிஓ

நடிகா் அமீா் கானின் போலி தோ்தல் பிரசார விடியோ: மும்பை போலீஸ் வழக்குப்பதிவு

SCROLL FOR NEXT