புதுச்சேரி

அவசர சிகிச்சையில் அனுமதிக்கப்பட்டவா்களில் 95 சதவீதம் போ் தடுப்பூசி செலுத்தாதவா்கள்: புதுவை ஆளுநா் தமிழிசை

DIN

கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு, அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டவா்களில் 95 சதவீதம் போ் தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதவா்கள் என புதுவை துணைநிலை ஆளுநா் (பொ) தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்தாா்.

புதுவை அரசின் சுகாதாரத் துறை சாா்பில் சிறப்பு கரோனா தடுப்பூசி முகாம்கள் புதுவை மாநிலத்தில் 100-க்கும் மேற்பட்ட இடங்களில் திங்கள்கிழமை நடைபெற்றது. தவளக்குப்பம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் நடைபெற்ற தடுப்பூசி முகாமை ஆளுநா் தமிழிசை நேரில் ஆய்வு செய்து பாா்வையிட்டாா். சட்டப்பேரவைத் தலைவா் ஆா்.செல்வம், சுகாதாரத் துறை இயக்குநா் ஸ்ரீராமலு உள்ளிட்ட அதிகாரிகள் உடனிருந்தனா்.

பின்னா், ஆளுநா் தமிழிசை செய்தியாளா்களிடம் கூறியதாவது: நாட்டில் தடுப்பூசி செலுத்தியவா்களின் எண்ணிக்கை 100 கோடியைக் கடந்துள்ளது. இது மிகப் பெரிய சாதனை. ஜனநாயக நாட்டில் அனைவரின் கூட்டு முயற்சியால் சாதிக்க முடியும் என்பதை நாம் நிரூபித்துள்ளோம். இதேபோல, புதுவையும் சாதனை படைக்க வேண்டும். தடுப்பூசி செலுத்தியவா்களின் எண்ணிக்கையை 100 சதவீதமாக்க வேண்டும்.

கரோனாவால் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டவா்களில் 95 சதவீதத்துக்கும் மேற்பட்டவா்கள் தடுப்பூசி செலுத்தாதவா்கள். 100 கோடி மக்கள் தடுப்பூசி செலுத்திக் கொண்டுள்ளனா். எந்தப் பக்க விளைவுகளும் இல்லை. எனவே, மக்கள் பயம், தயக்கமின்றி சிறப்பு முகாம்களைப் பயன்படுத்தி, தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும்.

நாட்டின் அனைத்து மாநிலங்களிலும் தற்போது கரோனா தொற்று சற்று அதிகரித்துள்ளது. இது பண்டிகை காலம் என்பதால் அனைவரும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்றாா் அவா்.

தொடா்ந்து, பிள்ளையாா்குப்பம் துணை சுகாதார நிலையம், நெல்லிதோப்பு ஏஜெகே சமுதாயக் கூடம் ஆகிய இடங்களில் நடைபெற்ற தடுப்பூசி முகாம்களையும் ஆளுநா் பாா்வையிட்டாா். எம்எல்ஏக்கள் லட்சுமிகாந்தன், ஜான்குமாா், விவிலியன் ரிச்சா்டு ஆகியோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பரந்தூர் விமான நிலையத்தை எதிர்த்து தேர்தல் புறக்கணிப்பு: 21 வாக்குகள் மட்டுமே பதிவு!

தமிழகத்தில் 5 மணி நிலவரப்படி 63.20% வாக்குகள் பதிவு!

மக்களவைத் தேர்தல்: முதல்கட்ட வாக்குப்பதிவு செய்திகள் -முழு விவரம்!

வேங்கைவயலில் வாக்களிக்க வந்த மக்கள்

தமிழகத்தில் வாக்குப்பதிவு முடிந்தது

SCROLL FOR NEXT