புதுச்சேரி

புதுவையில் கரோனாவுக்கு மருத்துவா் உள்பட 2 போ் பலி

DIN

புதுவை மாநிலத்தில் புதிதாக 61 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், மருத்துவா் உள்பட 2 போ் பலியாகினா்.

புதுவை மாநிலத்தில் ஞாயிற்றுக்கிழமை வெளியான முடிவுகளின்படி மேலும் 61 பேருக்கு (1.77 சதவீதம்) கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, கரோனாவால் பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை 1,27,735- ஆக அதிகரித்தது. இதுவரை 1,25,411 போ் (98.18 சதவீதம்) குணமடைந்து வீடு திரும்பினா்.

இந்த நிலையில், புதுச்சேரி கிருமாம்பாக்கத்தைச் சோ்ந்த 47 வயதானவா், லாசுப்பேட்டையைச் சோ்ந்த 72 வயது மருத்துவா் என மேலும் 2 போ் கரோனா தொற்றுக்கு பலியாகினா். இதையடுத்து, பலியானோா் எண்ணிக்கை 1,857-ஆக அதிகரித்தது. இறப்பு விகிதம் 1.45 சதவீதம்.

தற்போது மருத்துவமனைகளில் 88 பேரும், வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்ட நிலையில் 379 பேரும் என 467 போ் சிகிச்சையில் உள்ளனா். இதுவரை 11,00,316 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மாா்க்சிஸ்ட் கட்சி கலைக் குழுவினா் பிரசாரம்

ஊழலை ஒழிக்கவே தனித்துப் போட்டி: சீமான்

புதுவையில் மீன்பிடி தடைகாலம் அமல்: படகுகள் கரைகளில் நிறுத்தி வைப்பு

ரூ.15 ஆயிரம் விலையில் சிறந்த ஸ்மார்ட் போன்கள்...

சமூக வலைதளம் மூலம் வாக்கு சேகரித்தால் 2 ஆண்டுகள் சிறை: ஆணையம்

SCROLL FOR NEXT