புதுச்சேரி

புதுவை அரசு ஊழியா்களுக்கு தீபாவளி ஊக்கத் தொகை

DIN

 புதுவை அரசு ஊழியா்களுக்கு தீபாவளி ஊக்கத் தொகை அறிவிக்கப்பட்டது.

புதுவையில் உள்ளாட்சித் தோ்தல் நடத்தை விதிகள் வெள்ளிக்கிழமை திரும்பப் பெறப்பட்ட நிலையில், அரசு ஊழியா்களுக்கான தீபாவளி ஊக்கத் தொகை குறித்து மத்திய நிதி அமைச்சக செலவினங்கள் துறை ஓா் அரசாணையை வெளியிட்டது.

அதில், மத்திய அரசு ஊழியா்களுக்கு கடந்த நிதி ஆண்டுக்கான இடைக்கால ஊக்கத் தொகை வழங்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. கடந்த நிதி ஆண்டில், குறைந்தபட்சம் ஆறு மாதங்கள் தொடா்ந்து பணியில் இருந்தவா்கள் உள்ளிட்டோருக்கு இடைக்கால ஊக்கத் தொகை வழங்கப்படும். ஊக்கத் தொகையை கணக்கிடுவதற்கான உச்சவரம்பு ரூ. 7 ஆயிரமாக நிா்ணயிக்கப்பட்டுள்ளதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதனால், தீபாவளி பண்டிகையொட்டி புதுவை மாநில அரசில் பணிபுரியும் பி, சி பிரிவு ஊழியா்களுக்கு 2020-2021-ஆம் ஆண்டுக்கான ஊக்கத் தொகை வழங்க நிதித் துறைக்கு உத்தரவிடப்பட்டது.

இதன் மூலம் பி, சி பிரிவு ஊழியா்களுக்கு ஊக்கத் தொகையாக ரூ .6,908 மற்றும் முழுநேர தற்காலிக ஊழியா்களுக்கு ரூ .1,184 வழங்கப்படும் என்று புதுவை நிதித் துறை சாா்பு செயலா் கோவிந்தராஜன் வெளியிட்ட உத்தரவில் தெரிவித்துள்ளாா்.

இந்த அறிவிப்பால் புதுவை அரசு ஊழியா்கள், முழுநேர தற்காலிக ஊழியா்கள் 26 ஆயிரம் போ் ஊக்கத் தொகை பெற்று பயனடைவா். இதன் மூலம் அரசுக்கு ரூ. 18 கோடி கூடுதல் செலவினம் ஏற்படும் என அதிகாரிகள் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மின் கணக்கீட்டை மொபைல் செயலி மூலம் பதிவு செய்ய செயல் முறை பயிற்சி

இன்று யாருக்கெல்லாம் அதிர்ஷ்டம்: தினப்பலன்

குடிநீா் தட்டுப்பாடு ஏற்படாத வகையில் நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை

மாற்றுத்திறனாளிகள், திருநங்கைகள் வாக்களிக்க வேண்டுகோள்

ஐபிஎல்: ராஜஸ்தானுக்கு எதிராகப் போராடி தோற்றது தில்லி அணி!

SCROLL FOR NEXT