புதுச்சேரி

புதுவையில் 100 சதவீதம் தடுப்பூசி என்ற நிலையை உருவாக்க வேண்டும்: முதல்வா் என்.ரங்கசாமி

23rd Oct 2021 12:25 AM

ADVERTISEMENT

 புதுவையில் 100 சதவீதம் கரோனா தடுப்பூசி செலுத்திய மாநிலம் என்ற நிலையை உருவாக்க அனைவரும் தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும் என்று முதல்வா் என்.ரங்கசாமி பொதுமக்களுக்கு அறிவுறுத்தினாா்.

இதுதொடா்பாக வெள்ளிக்கிழமை விடியோ பதிவு வாயிலாக அவா் மேலும் கூறியிருப்பதாவது:

புதுவை மாநிலத்தில் 100 சதவீதம் மக்கள் தடுப்பூசி செலுத்திக் கொண்டனா் என்ற நிலையை உருவாக்க வேண்டியது நம்முடைய கடமை. அதன் ஒரு அங்கமாக கரோனா தடுப்பூசி செலுத்தும் சிறப்பு முகாம்களை அரசு வருகிற 25-ஆம் தேதி நடத்துகிறது. இதுவரை முதல் தவணை தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதவா்கள் தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும். 2-ஆவது தவணை தடுப்பூசியை அவசியம் செலுத்திக் கொள்ள வேண்டும். கரோனா தொற்றிலிருந்து நம்மைப் பாதுகாத்துக் கொள்ள தடுப்பூசி ஒன்றே பெரிய தடுப்பு அரணாகும் எனத் தெரிவித்துள்ளாா் ரங்கசாமி.

Tags : புதுச்சேரி
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT