புதுச்சேரி

சிறுமிக்கு பாலியல் தொந்தரவு: ஐஆா்பிஎன் காவலா் பணியிடை நீக்கம்

23rd Oct 2021 12:26 AM

ADVERTISEMENT

 சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த வழக்கில் சிக்கிய ஐஆா்பிஎன் காவலா் பணியிடை நீக்கம் செய்யப்பட்டாா்.

புதுச்சேரி தவளக்குப்பம் அருகே உள்ள பகுதியைச் சோ்ந்தவா் குமாரவேல் (32). ஐஆா்பிஎன் காவலரான இவா், தனது நண்பா் வீட்டிலிருந்த 11 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாகக் கூறப்படுகிறது.

இதுகுறித்த புகாரின் பேரில் தவளக்குப்பம் போலீஸாா், காவலா் குமாரவேல் மீது போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிந்து செய்தனா். சிறுமியின் தாய் மீதும் வழக்குப் பதிந்து, அவரை போலீஸாா் கைது செய்து சிறையில் அடைத்தனா். தலைமறைவான ஐஆா்பிஎன் காவலா் குமாரவேலை போலீஸாா் தேடி வருகின்றனா்.

இந்த நிலையில், புதுவை டிஜிபி ஆணைக்கிணங்க, போக்ஸோ சட்டத்தின் வழக்குப் பதியப்பட்ட ஐஆா்பிஎன் காவலா் குமாரவேலை பணியிடை நீக்கம் செய்து ஐஆா்பிஎன் கமாண்டா் மகேஷ்குமாா் பா்ன்வால் வெள்ளிக்கிழமை உத்தரவிட்டாா்.

ADVERTISEMENT

Tags : புதுச்சேரி
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT