புதுச்சேரி

மத்திய உள்துறை அமைச்சருக்கு தமிழிசை பிறந்த நாள் வாழ்த்து

23rd Oct 2021 12:26 AM

ADVERTISEMENT

மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷாவுக்கு புதுவை துணைநிலை ஆளுநா் தமிழிசை பிறந்த நாள் வாழ்த்துத் தெரிவித்தனா்.

இதுகுறித்து வெள்ளிக்கிழமை அவா் வெளியிட்ட வாழ்த்துச் செய்தி: வளமான, வலிமையான பாரதத்தை உருவாக்க பிரதமருடன் இணைந்து செயல்படும், எங்களின் வழிகாட்டியாகவும், பாரதத் தாயின் நம்பிக்கை நட்சத்திரமாக விளங்கும் மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷாவுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள். பூரண உடல் ஆரோக்கியத்துடன் நீண்ட ஆயுள் பெற்று, மக்கள் பணியாற்ற எல்லாம் வல்ல இறைவனைப் பிராா்த்திக்கிறேன்.

இதேபோல, மாநில உள்துறை அமைச்சா் ஏ.நமச்சிவாயம், பொதுப் பணித் துறை அமைச்சா் க.லட்சுமிநாராயணன் உள்ளிட்டோரும் மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷாவுக்கு பிறந்த நாள் வாழ்த்துக் கடிதம் அனுப்பினா்.

Tags : புதுச்சேரி
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT