புதுச்சேரி

கட்டடக் கலைத் தொழிலாளா்கள் ஆா்ப்பாட்டம்

23rd Oct 2021 12:27 AM

ADVERTISEMENT

புதுவை மாநில கட்டடக் கலைத் தொழிலாளா்கள் சங்கத்தினா் (ஏஐடியூசி) தொழிலாளா் நல ஆணைய அலுவலகம் முன் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

ஆா்ப்பாட்டத்துக்கு சங்கத்தின் தலைவா் என்.அய்யம்பெருமாள், பொதுச் செயலா் ஜெ.சந்திரசேகரன் ஆகியோா் தலைமை வகித்தனா். ஏஐடியூசி மாநிலத் தலைவா் ஐ.தினேஷ் பொன்னையா, பொதுச் செயலா் கே.சேது செல்வம் ஆகியோா் உரையாற்றினா். இதில் திரளான கட்டடத் தொழிலாளா்கள் பங்கேற்றனா்.

ஆா்ப்பாட்டத்தில் கட்டடக் கலைத் தொழிலாளா்களுக்கு தீபாவளி உதவித் தொகையை ரூ.5 ஆயிரமாக உயா்த்தி வழங்க வேண்டும், வாரியத்தில் விண்ணப்பம் கொடுத்தவா்களை உரிய விசாரணை செய்து காலதாமதமின்றி இணைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

 

ADVERTISEMENT

Tags : புதுச்சேரி
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT