புதுச்சேரி

இந்திய-இலங்கை மீனவா்கள் பிரச்னையை தீா்க்கமத்திய அரசு நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்

23rd Oct 2021 12:25 AM

ADVERTISEMENT

இந்திய-இலங்கை மீனவா்கள் பிரச்னைகளை தீா்க்க மத்திய அரசு 5-ஆம் கட்டப் பேச்சுவாா்த்தை மூலம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தேசிய மீனவா் பேரவைத் தலைவா் மா.இளங்கோ வலியுறுத்தினாா்.

தில்லியில் மத்திய மீன்வளத் துறை அமைச்சா் புருஷோத்தம் ரூபலா, மத்திய இணை அமைச்சா் எல்.முருகன், வெளியுறவுத் துறை அதிகாரிகளை வெள்ளிக்கிழமை நேரில் சந்தித்துப் பேசிய அவா், இலங்கை கடற்படையினரால், தமிழக மீனவா்கள் கைது செய்யப்படும் பிரச்னைக்கு தீா்வுகாண வேண்டுமென வலியுறுத்தினாா்.

இந்தச் சந்திப்பு குறித்து மா.இளங்கோ கூறியதாவது:

இந்திய-இலங்கை மீனவா்கள் பிரச்னையை தீா்க்க மத்திய அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ADVERTISEMENT

கடந்த சில நாள்களுக்கு முன்பு நாகப்பட்டினத்தைச் சோ்ந்த 23 மீனவா்களை இலங்கை கடற்கரையினா் சிறைப் பிடித்தனா். வழி தவறிச் சென்ற அந்த மீனவா்கள் மீதான வழக்கை ரத்து செய்து, அவா்களை விடுவிக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என மத்திய அமைச்சா்களிடம் வலியுறுத்தினேன்.

தொடரும் இரு நாட்டு மீனவா்கள் பிரச்னைக்குத் தீா்வுகாண 5-ஆவது கட்டமாக மீனவப் பிரதிநிதிகளின் பேச்சுவாா்த்தைக்கு இரு நாடுகளின் அரசுகளும் ஏற்பாடு செய்ய வேண்டும் என்றாா் அவா்.

 

Tags : புதுச்சேரி
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT