புதுச்சேரி

புதுவையில் உள்ளாட்சித் தேர்தல் தள்ளிப் போவதால் நடத்தை விதிகள் நீக்கம்

DIN

புதுவையில் உள்ளாட்சித் தேர்தல் தள்ளிப் போவதால், நன்னடத்தை விதிகள் தொடர்வதால் பயனில்லை எனக்குறிப்பிட்டு அதை நீக்கி மாநில தேர்தல் ஆணையர் ராய் பி தாமஸ் உத்தரவிட்டுள்ளார்.

புதுவை மாநிலத்தில் உள்ளாட்சி தேர்தலுக்கான தேதியை கடந்த மாதம் 22ம் தேதி மாநிலத் தேர்தல் ஆணையம் அறிவித்தது. வார்டு ஒதுக்கீட்டில் குளறுபடி வழக்கால், தேர்தல் நிறுத்தி வைக்கப்பட்டது.

இதையடுத்து மாநில தேர்தல் ஆணையம் 2வது முறையாக தேர்தல் தேதியை அறிவித்தது. இதற்கு, திமுக சார்பில் இடஒதுக்கீடு ரத்து அறிவிப்பை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில்  வழக்கு தொடர்ந்தனர்.

இதையடுத்து  அக்.21-ம் தேதி வரை தேர்தல் பணிகளை நிறுத்திவைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது. தேர்தல் நிறுத்திவைக்கப்பட்டாலும், நடத்தை விதிகள் தொடர்ந்து அமலில் இருந்தது. 

அனைத்துக்கட்சி எம்எல்ஏக்களும் அதனை வாபஸ் பெறக்கோரினர். 
ஆனால் தேர்தல் ஆணையர் ஏற்க மறுத்து, நன்னடத்தை விதிகள் அமலில் இருக்கும் என்று தெரிவித்திருந்தார்.சென்னை உயர்நீதிமன்றத்தில் அக்.21ம் தேதி இவ்வழக்கு விசாரணைக்கு வந்தது. இதில் தேர்தலை நிறுத்தி வைக்க பிறப்பிக்கப்பட்ட உத்தரவு நீட்டிக்கப்பட்டது.

இந்நிலையில், வெள்ளிக்கிழமை மாநில தேர்தல் ஆணையர் ராய் பி தாமஸ் வெளியிட்ட உத்தரவில், சட்ட ஆலோசனைப்படி, புதுவையில் உள்ளாட்சித் தேர்தல் நடைபெறும் சாத்தியக்கூறுகள் தள்ளிப் போவதைத் தொடர்ந்து, நடைமுறையில் உள்ள தேர்தல் நன்னடத்தை விதிகள் தொடர்வது பயனற்றது என்று குறிப்பிட்டு, தேர்தல் நடத்தை விதிகளை நீக்கி உள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கிரிக்கெட் கதையை இயக்கும் ஜேசன் சஞ்சய்?

கர்நாடகத்துக்கு போறீங்களா.. ஹாயர் பெனகல்லை தவறவிடாதீர்!

’ஸ்டார்’ கரீனா கபூர்!

5 பன்னீர்செல்வங்களின் வேட்புமனுக்களும் ஏற்பு: போட்டி உறுதி!

தமிழக காவல் துறையில் இளநிலை செய்தியாளர் வேலை வேண்டுமா?

SCROLL FOR NEXT