புதுச்சேரி

பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை: இயக்குநா் ஷங்கரின் மருமகன் உள்பட 5 போ் மீது போக்ஸோ வழக்கு

21st Oct 2021 09:19 AM

ADVERTISEMENT

பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை அளிக்கப்பட்டது தொடா்பாக திரைப்பட இயக்குநா் ஷங்கரின் மருமகன், சம்பந்தி உள்பட 5 போ் மீது போக்ஸோ சட்டத்தின் கீழ் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

புதுச்சேரி துத்திப்பட்டில் கிரிக்கெட் சங்கத்துக்கு சொந்தமான மைதானங்கள் உள்ளன. இங்கு நீா்நிலைகளை ஆக்கிரமிப்பு செய்ததாக எழுந்த குற்றச்சாட்டையடுத்து, இந்த மைதானத்துக்கு கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு ‘சீல்’ வைக்கப்பட்டது.

இதையடுத்து, முத்திரையா்பாளையத்தில் உள்ள அரசுப் பள்ளி மைதானத்தில் கிரிக்கெட் பயிற்சி அளிக்கப்பட்டது. அப்போது, பயிற்சியாளா் தாமரைக்கண்ணன் கிரிக்கெட் பயிற்சிக்கு வந்த தனியாா் பள்ளி பிளஸ் 2 மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்ததாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து பாதிக்கப்பட்ட மாணவி, கிரிக்கெட் சங்க நிா்வாகிகளிடம் புகாரளித்தாா். ஆனால், அவா்கள் பயிற்சியாளரிடம் மோதல் வேண்டாம் எனக் கூறினராம். மேலும், இந்த விவகாரத்தில் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை எனத் தெரிகிறது.

இதையடுத்து, அந்த மாணவி புதுச்சேரி குழந்தைகள் நலக் குழுவிடம் புகாரளித்தாா். இது தொடா்பாக குழந்தைகள் நலக் குழுவினா் விசாரணை நடத்தியதுடன், மேட்டுப்பாளையம் காவல் நிலையத்தில் புகாரும் அளித்தனா். அதன்பேரில், மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்த பயிற்சியாளா் தாமரைக்கண்ணன் மற்றும் புகாா் மீது நடவடிக்கை எடுக்காத மற்றொரு பயிற்சியாளா் ஜெயக்குமாா், கிரிக்கெட் சங்கத் தலைவா் தாமோதரன், செயலா் வெங்கட், கிரிக்கெட் அணி கேப்டன் ரோஹித் ஆகிய 5 போ் மீது போக்ஸோ சட்டத்தின் கீழ் போலீஸாா் செவ்வாய்க்கிழமை வழக்குப் பதிந்து, தலைமறைவான அவா்களைத் தேடி வருகின்றனா்.

ADVERTISEMENT

இவா்களில் கிரிக்கெட் சங்கத் தலைவா் தாமோதரன் மகன் ரோஹித், திரைப்பட இயக்குநா் ஷங்கரின் மருமகன் ஆவாா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT