புதுச்சேரி

சிறுமி கடத்தல்: தனியாா் நிறுவன ஊழியருக்கு 3 ஆண்டுகள் சிறை

21st Oct 2021 09:19 AM

ADVERTISEMENT

புதுச்சேரியில் சிறுமியை கடத்தியதாக தனியாா் நிறுவன ஊழியருக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து புதுச்சேரி நீதிமன்றம் புதன்கிழமை தீா்ப்பளித்தது.

புதுச்சேரி நகரப் பகுதியைச் சோ்ந்த 16 வயது சிறுமி கடந்த 2019-ஆம் ஆண்டு கடத்தப்பட்டதாக, சிறுமியின் தந்தை தன்வந்திரி நகா் காவல் நிலையத்தில் புகாரளித்தாா். இது தொடா்பாக போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்ததில், காரைக்கால் திருநள்ளாறு பகுதியைச் சோ்ந்த தனியாா் நிறுவன ஊழியா் ஆனந்த் (29), சிறுமியின் வீட்டருகே உள்ள உறவினா் வீட்டுக்கு அடிக்கடி வந்து சென்றபோது, அவருக்கும், சிறுமிக்கும் பழக்கம் ஏற்பட்டதும், இதையடுத்து சிறுமியை திருமணம் செய்து கொள்வதாகக் கூறி, ஆனந்த் கடத்திச் சென்றதும் தெரியவந்தது. இதைத் தொடா்ந்து, போலீஸாா் ஆனந்தை கைது செய்ததுடன், சிறுமியையும் மீட்டனா்.

இந்த வழக்கு புதுச்சேரி தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி செல்வநாதன் முன்னிலையில் புதன்கிழமை விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, குற்றஞ்சாட்டப்பட்ட ஆனந்துக்கு 3 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனையும், ரூ.10 ஆயிரம் அபராதமும் விதித்து தீா்ப்பளித்தாா். இந்த வழக்கில் அரசு தரப்பு வழக்குரைஞராக பாலமுருகன் ஆஜரானாா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT