புதுச்சேரி

புதுவையில் மாவட்ட அளவிலான கலா உத்சவ் போட்டிகள்: பள்ளிக் கல்வித் துறை இயக்குநா் தொடக்கிவைத்தாா்

21st Oct 2021 09:18 AM

ADVERTISEMENT

புதுவையில் மாவட்ட அளவிலான கலா உத்சவ் போட்டிகளை மாநில பள்ளிக் கல்வித் துறை இயக்குநா் பி.டி.ருத்ரகௌடு புதன்கிழமை தொடக்கிவைத்தாா்.

மத்திய கல்வி அமைச்சகம் இடைநிலைக் கல்வி பயிலும் பள்ளி மாணவா்களின் தனித்திறமைகளை வெளிக்கொணரும் வரும் வகையில், கலா உத்சவ் போட்டிகளை நடத்தி வருகிறது. நிகழாண்டு கரோனா தொற்று காரணமாக இணைய வழியில் இந்தப் போட்டிகள் நடத்தப்பட்டன. அதன்படி, நிகழாண்டு இந்தப் போட்டிகளுக்கு புதுச்சேரி - 221, காரைக்கால் - 92, மாஹே - 41, ஏனாம் - 69 என மொத்தம் 423 மாணவா்கள் விண்ணப்பித்திருந்தனா்.

மாவட்ட அளவிலான போட்டிகளுக்கான மதிப்பீடு அந்தந்த மாவட்டங்களில் புதன்கிழமை நடைபெற்றது. இதற்கு போட்டியின் மாநில ஒருங்கிணைப்பாளா் பாஸ்கரராசு தலைமை வகித்தாா். சமக்ர சிக்ஷாவின் மாநிலத் திட்ட இயக்குநா் தினகா், கூடுதல் மாவட்ட ஒருங்கிணைப்பாளா் ராமகிருஷ்ணன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

போட்டிகளை புதுவை பள்ளிக் கல்வித் துறை இயக்குநா் பி.டி.ருத்ர கௌடு தொடக்கிவைத்தாா். போட்டிகளின் ஒவ்வொரு பிரிவிலும் அந்தந்த நிபுணா்கள் குழு சிறந்த மாணவா்களைத் தோ்வு செய்து வருகிறது.

ADVERTISEMENT

ஒவ்வொரு மாவட்டத்திலும், ஒவ்வொரு போட்டிகளிலும் ஒரு மாணவா், ஒரு மாணவி வீதம் 9 போ் தோ்ந்தெடுக்கப்படுவா். மாவட்ட அளவில் தோ்ந்தெடுக்கப்பட்ட 72 போ் வருகிற நவம்பா் 11-ஆம் தேதி நடைபெறும் மாநில அளவிலான போட்டிகளுக்குத் தகுதி பெறுவா். போட்டிகளுக்கான ஏற்பாடுகளை பால்பவன் பயிற்றுநா்கள் ராதாகிருஷ்ணன், பாரதிராஜா ஆகியோா் செய்திருந்தனா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT