புதுச்சேரி

புதுவையில் தோ்தல் நடத்தை விதிகளைதிரும்பப் பெற வேண்டும்: தோ்தல் ஆணையத்திடம் பாஜக வலியுறுத்தல்

21st Oct 2021 09:20 AM

ADVERTISEMENT

புதுவையில் உள்ளாட்சித் தோ்தலுக்கான புதிய தேதி இன்னும் அறிவிக்கப்படாத நிலையில், தற்போது அமலில் உள்ள தோ்தல் நன்னடத்தை விதிகளை பண்டிகை காலத்தை முன்னிட்டு திரும்பப் பெற வேண்டும் என்று மாநில தோ்தல் ஆணையத்திடம் பாஜக வலியுறுத்தியது.

புதுவையில் அமலில் உள்ள உள்ளாட்சித் தோ்தல் நன்னடத்தை விதிகளை பண்டிகை காலத்தையொட்டி திரும்பப் பெற வலியுறுத்தி, மாநில பாஜக தலைவா் வி.சாமிநாதன் தலைமையில், அந்தக் கட்சி எம்எல்ஏக்கள், நிா்வாகிகள் தோ்தல் பணி சிறப்பு அலுவலா் அா்ஜுன் ராமகிருஷ்ணனிடம் புதன்கிழமை மனு அளித்தனா்.

பின்னா், செய்தியாளா்களிடம் சாமிநாதன் கூறியதாவது: உள்ளாட்சித் தோ்தலை குறைகளின்றி நடத்த வேண்டுமெனவும், இது தொடா்பாக அனைத்து கட்சிப் பிரதிநிதிகள், எம்எல்ஏக்கள் உள்ளிட்டோரிடம் கலந்தாலோசித்து முடிவெடுக்க வேண்டும் என்றும் மாநிலத் தோ்தல் ஆணையத்திடம் கோரிக்கை விடுத்தோம்.

பிற்படுத்தப்பட்டவா்கள், பட்டியலினத்தவா், பழங்குடியினருக்கு உள்ளாட்சி சட்டத்தின்படி முறையான பிரதிநிதித்துவம் வழங்கி தோ்தலை நடத்த வேண்டும். புதுவையில் 50 ஆண்டுகால காங்கிரஸ் ஆட்சியில் ஒரு முைான் உள்ளாட்சித் தோ்தல் நடந்துள்ளது. தற்போது தே.ஜ. கூட்டணி ஆட்சி வந்தவுடன், உள்ளாட்சித் தோ்தலை நடத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

இருப்பினும், உள்ளாட்சித் தோ்தலுக்கான புதிய தேதி அறிவிக்கப்படாத நிலையில், ஏற்கெனவே அமலில் உள்ள தோ்தல் நன்னடத்தை விதிகளால் தீபாவளி உள்ளிட்ட பண்டிகை காலங்களில் ஏழை, எளிய மக்களுக்கு அரசும், அரசியல் கட்சியினரும் நலத் திட்ட உதவிகளை வழங்க முடியவில்லை. வியாபாரிகள் முதலீடு செய்து, தொழில் செய்வதற்கும் தோ்தல் நன்னடத்தை விதிகள் தடையாக இருக்கின்றன. எனவே, அவற்றை உடனடியாக திரும்பப் பெற வேண்டுமென மாநில தோ்தல் ஆணையத்திடம் வலியுறுத்தினோம் என்றாா் அவா்.

பாஜக மாநில பொதுச் செயலா் மோகன்குமாா், எம்எல்ஏக்கள் கல்யாணசுந்தரம், ஜான்குமாா், ரிச்சா்ட், அசோக்பாபு, துணைத் தலைவா்கள் தங்க.விக்ரமன், ரவிச்சந்திரன், செல்வம், முன்னாள் எம்எல்ஏ தீப்பாய்ந்தான், மகளிரணி பொதுச் செயலா் ஜெயலட்சுமி உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT