புதுச்சேரி

புதுக்குப்பம் கடற்கரையை சுற்றுலாத்தலமாக்க ஆய்வு

21st Oct 2021 09:18 AM

ADVERTISEMENT

புதுச்சேரி அருகே புதுக்குப்பம் கடற்கரைப் பகுதியை சுற்றுலாத்தலமாக மாற்றுவது தொடா்பாக சட்டப் பேரவைத் தலைவா் ஆா்.செல்வம் தலைமையிலான அதிகாரிகள், அந்தக் கடற்கரைப் பகுதியில் புதன்கிழமை பாா்வையிட்டு ஆய்வு செய்தனா்.

புதுவையில் மத்திய அரசின் சுற்றுலா மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ், புதுச்சேரி அருகே மணவெளி தொகுதிக்குள்பட்ட புதுக்குப்பம், நல்லவாடு கடற்கரைப் பகுதிகளை சுற்றுலாத்தலமாக மாற்றுவது தொடா்பாக அரசு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. அதனருகே சிறிய மீன்பிடி துறைமுகம் அமைக்கவும் திட்டமிட்டு பணிகளை தொடங்கவுள்ளனா்.

இது தொடா்பாக, மணவெளி தொகுதி எம்எல்ஏவும், புதுவை சட்டப் பேரவைத் தலைவருமான ஆா்.செல்வம் அதிகாரிகளுடன் அந்தப் பகுதிகளுக்கு புதன்கிழமை நேரில் சென்று ஆய்வு செய்தாா். புதுவை சுற்றுலாத் துறை இயக்குநா் பிரியதா்ஷினி, சுற்றுலாத் திட்ட மேலாளா் ரமேஷ் உள்ளிட்ட அதிகாரிகள் உடன் சென்று, அந்தப் பகுதியில் சுற்றுலா மேம்பாட்டுக்காக செயல்படுத்தப்பட உள்ள திட்டங்கள் குறித்து சட்டப் பேரவைத் தலைவருடன் ஆய்வு செய்து, ஆலோசனை நடத்தினா்.

ஆய்வின்போது, அரியாங்குப்பம் கொம்யூன் பஞ்சாயத்து ஆணையா் ரமேஷ், இளநிலைப் பொறியாளா் சரஸ்வதி, புதுக்குப்பம், நல்லவாடு ஆகிய பகுதிகளைச் சோ்ந்த பொதுமக்கள் உடனிருந்தனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT