புதுச்சேரி

புதுவையில் போா் நினைவு நிகழ்ச்சிகள் குறித்து அமைச்சருடன் ஆலோசனை

21st Oct 2021 09:19 AM

ADVERTISEMENT

புதுச்சேரியில் நடைபெறவுள்ள இந்தியா - பாகிஸ்தான் போா் நினைவு பொன் விழா ஆண்டு நிகழ்ச்சிகள் தொடா்பாக, உள் துறை அமைச்சருடன் தென்பிராந்திய ராணுவ பிரிவு அதிகாரிகள் புதன்கிழமை ஆலோசனை நடத்தினா்.

புதுச்சேரிக்கு வியாழக்கிழமை வந்த இந்திய ராணுவத்தின் தென்பிராந்திய தலைமையக அதிகாரிகள் பிரிகேடியா் சிகா தமிழ் அமுதன், கா்னல் அனோஜ், கா்னல் ரவீந்திரன், முன்னாள் படைவீரா் அணித் தலைவா் சாா்ஜன்ட் மோகன் ஆகியோா் சட்டப் பேரவை அலுவலகத்தில் மாநில உள் துறை அமைச்சா் ஏ.நமச்சிவாயத்தை மரியாதை நிமித்தமாக சந்தித்துப் பேசினா்.

புதுவையில் வருகிற நவம்பா் மாதம் நடைபெறவுள்ள இந்தியா - பாகிஸ்தான் போா் நினைவு 50-ஆம் பொன்விழா நிகழ்வில், கடந்த 1971-ஆம் ஆண்டில் நடைபெற்ற போரில் பங்கேற்ற ராணுவ வீரா்களை கௌரவிக்கும் நிகழ்ச்சிகளை நடத்துவது குறித்து உள் துறை அமைச்சருடன் ஆலோசனை நடத்தினா். அப்போது, பாஜக மாநிலச் செயலா் ஜெயந்தி உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT