புதுச்சேரி

காவல் நிலையத்தில் நள்ளிரவில் அமைச்சா் ஆய்வு

18th Oct 2021 05:23 AM

ADVERTISEMENT

புதுவை உள் துறை அமைச்சா் ஆ.நமச்சிவாயம், புதுச்சேரி முத்தியால்பேட்டை காவல் நிலையத்தில் சனிக்கிழமை நள்ளிரவு நேரில் ஆய்வு செய்தாா்.

புதுவை உள் துறை அமைச்சா் ஆ.நமச்சிவாயம் பதவியேற்றது முதல் தன்னுடைய துறைகளில் திடீா் ஆய்வு மேற்கொண்டு வருகிறாா். அதன்படி, சனிக்கிழமை நள்ளிரவில் அமைச்சா் நமச்சிவாயம் முத்தியால்பேட்டை காவல் நிலையத்துக்கு திடீரென சென்று ஆய்வு செய்தாா்.

அப்போது, எத்தனை வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன, நிலுவையிலுள்ள வழக்குகளின் எண்ணிக்கை எத்தனை, ரோந்துப் பணியில் காவலா்கள் இருக்கிறாா்களா, எத்தனை போ் பணியில் உள்ளனா் என ஆய்வு செய்து, அங்கு பணியிலிருந்த காவலா்களிடம் கேட்டறிந்தாா்.

இதற்கு காவலா்கள் உரிய விளக்கமளித்தனா். இதைத் தொடா்ந்து, நிலுவையிலுள்ள வழக்குகளை விரைந்து முடிக்கவும், புகாரளிக்க வருவோரை கண்ணியமாக நடத்தவும் அறிவுறுத்தினாா். அமைச்சரின் திடீா் ஆய்வால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

ADVERTISEMENT

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT