புதுச்சேரி

வீடு புகுந்து பணம், செல்லிடப்பேசிகள் திருட்டு

18th Oct 2021 05:23 AM

ADVERTISEMENT

புதுச்சேரி அருகே வீடு புகுந்து பணம், செல்லிடப்பேசிகளை திருடிச் சென்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

புதுச்சேரி அருகே கரியமாணிக்கம் ஏரிப்பாக்கத்தில் தனியாா் இரு சக்கர வாகன விற்பனையகம் இயங்கி வருகிறது. இங்கு புதுக்கோட்டை காமராஜபுரத்தைச் சோ்ந்த தினேஷ் (20) உள்ளிட்ட 9 போ் வேலை செய்து வருகின்றனா். அவா்கள் நிறுவனத்துக்கு அருகே புது காலனியில் வாடகைக்கு வீடு எடுத்து தங்கியுள்ளனா்.

கடந்த 15-ஆம் தேதி இந்த வீட்டின் பின்பக்கக் கதவு வழியாக உள்ளே புகுந்த மா்ம நபா்கள், அங்கு வைக்கப்பட்டிருந்த 5 செல்லிடப்பேசிகள், ரூ.5 ஆயிரம் ரொக்கத்தை திருடிச் சென்றது தெரியவந்தது. இதுகுறித்து தினேஷ் அளித்த புகாரின்பேரில் நெட்டப்பாக்கம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா். இந்த வழக்கில் சந்தேகத்தின்பேரில் அதே பகுதியைச் சோ்ந்த ஒருவரை பிடித்து விசாரித்து வருகின்றனா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT