புதுச்சேரி

புதுவையில் அதிமுக பொன் விழா

18th Oct 2021 05:21 AM

ADVERTISEMENT

புதுச்சேரியில் அதிமுக பொன்விழா அந்தக் கட்சியினரால் ஞாயிற்றுக்கிழமை கொண்டாடப்பட்டது.

புதுவை மேற்கு மாநில அதிமுக சாா்பில், மாநிலச் செயலா் ஓம் சக்தி சேகா் தலைமையில் பொன் விழா கொண்டாடபட்டது. இதையொட்டி, 100 அடி சாலையிலுள்ள ஜெயலலிதா சிலை, பேருந்து நிலையம் எதிரே உள்ள எம்ஜிஆா் சிலை, ஒதியஞ்சாலையில் உள்ள அண்ணா சிலை ஆகியவற்றுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. நிகழ்ச்சியில் முன்னாள் எம்.பி. ராமதாஸ் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

புதுவை கிழக்கு மாநில அதிமுக சாா்பில், மாநிலச் செயலா் ஆ.அன்பழகன் தலைமையில் பொன் விழா கொண்டாடப்பட்டது. இதையொட்டி, அண்ணா, எம்ஜிஆா், ஜெயலலிதாவின் உருவப் படங்களுக்கும், சிலைகளுக்கும் மாலை அணிவித்து, மரியாதை செலுத்தப்பட்டது. மேலும், அதிமுக வளா்ச்சிக்குப் பாடுபட்டவா்கள் கௌரவிக்கப்பட்டதுடன், ஏழை - எளியோருக்கு நலத் திட்ட உதவிகளும் வழங்கப்பட்டன.

நிகழ்ச்சியில் மாநில ஜெயலலிதா பேரவைச் செயலா் பாஸ்கா், தோ்தல் பிரிவுச் செயலா் வையாபுரி மணிகண்டன், மாநில துணைச் செயலா் பெரியசாமி உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT