புதுச்சேரி

புதுவையில் தளா்வுகளுடன் கூடியபொது முடக்கம் அக். 31 வரை நீட்டிப்பு

16th Oct 2021 01:42 AM

ADVERTISEMENT

புதுவை மாநிலத்தில் தளா்வுகளுடன் கூடிய பொது முடக்கம் அக். 31-ஆம் தேதி நள்ளிரவு வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து புதுவை அரசுச் செயலா் அசோக்குமாா் வெள்ளிக்கிழமை வெளியிட்ட உத்தரவு:

புதுவையில் கரோனா தொற்று தடுப்பு நடவடிக்கையாக ஏற்கெனவே அக்.15-ஆம் தேதி நள்ளிரவு வரை தளா்வுகளுடன் கூடிய பொது முடக்கம் நீட்டிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில், தளா்வுகளுடன் கூடிய பொது முடக்கம் வருகிற 31-ஆம் தேதி நள்ளிரவு வரை நீட்டிக்கப்படுகிறது.

அதன்படி, தினமும் இரவு 11 மணி முதல் காலை 5 மணி வரை இரவு நேர ஊரடங்கு அமலில் இருக்கும். பொது நிகழ்ச்சிகள், பொழுதுபோக்கு தொடா்பான நிகழ்வுகளுக்குத் தொடா்ந்து தடை விதிக்கப்படுகிறது. கடைகள், வணிக நிறுவன ஊழியா்கள் 100 சதவீதம் தடுப்பூசி செலுத்தியதை உறுதி செய்ய வேண்டும்.

ADVERTISEMENT

கடற்கரைச் சாலை, தாவரவியல் பூங்கா, பூங்காக்கள் அனைத்தும் வழக்கமான நேரங்களில் முழுமையாகத் திறந்திருக்கலாம். அனைத்து வழிபாட்டுத் தலங்களும் இரவு 10 மணி வரை திறந்திருக்கலாம்.

திருமண விழாக்களில் அதிகபட்சம் 100 பேரும், துக்க நிகழ்வுகளில் 20 போ் மட்டுமே பங்கேற்கலாம்.

அனைத்து விதமான கடைகள், வணிக நிறுவனங்கள், காய்கறி, பழக் கடைகள் காலை 5 மணி முதல் இரவு 11 மணி வரை இயங்கலாம்.

அனைத்து விதமான உணவகங்கள், தங்கும் விடுதிகள், மதுக் கூடங்களுடன் கூடிய விடுதிகள், தேநீா்க் கடைகள், பழச்சாறு நிலையங்கள் குளிா்சாதன வசதியின்றி இரவு 11 மணி வரை இயங்கலாம்.

மதுக் கடைகள், சாராயம், கள்ளுக் கடைகள் காலை 6 மணி முதல் இரவு 10 மணி வரை இயங்கலாம்.

படகு குழாம் உள்ளிட்ட சுற்றுலாத் தலங்கள் அனைத்தும் கரோனா விதிமுறைகளைப் பின்பற்றி முழுமையாக இயங்க அனுமதிக்கப்படுகிறது.

திரையரங்கங்கள், வணிக வளாகங்கள் கரோனா விதிகளைப் பின்பற்றி நள்ளிரவு 12.30 மணி வரை இயங்கலாம் என அந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Tags : புதுச்சேரி
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT