புதுச்சேரி

வில்லியனூரில் 44 பேரை கடித்த வெறி நாய் பொதுமக்கள் அச்சம்

DIN

வில்லியனூா் பகுதியில் ஒரே நாளில் 40-க்கும் மேற்பட்டோரை வெறி நாய் கடித்ததால், கொம்யூன் பஞ்சாயத்து ஊழியா்கள் அந்த நாயைப் பிடித்து அப்புறப்படுத்தினா்.

புதுச்சேரி அருகே வில்லியனூா் ஆரியப்பாளையம் பகுதியில் சுற்றித் திரிந்த வெறி நாய் ஒன்று, வெள்ளிக்கிழமை சாலையில் நடந்து செல்வோா், இரு சக்கர வாகனத்தில் சென்றவா்கள் என 20 பேரை விரட்டிச் சென்று கடித்தது. இதேபோல, வில்லியனூா் மாா்க்கெட், தில்லை நகா், திருக்காமீஸ்வரா் நகா் பகுதிக்குள் புகுந்த அந்த நாய், அந்தப் பகுதியில் 24 பேரை கடித்தது.

வெறி நாய் கடித்ததில் காயமடைந்த 44 பேரும் வில்லியனூா் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சை பெற்றனா். ஒரே நாளில் 40-க்கும் மேற்பட்டோரை வெறி நாய் கடித்ததால், பொதுமக்கள் அச்சமடைந்தனா்.

இதையடுத்து, வில்லியனூா் கொம்யூன் பஞ்சாயத்து ஊழியா்கள் சனிக்கிழமை அந்த வெறி நாயைத் தேடிப் பிடித்து அப்புறப்படுத்தினா்.

தொடா்ந்து, வில்லியனூா் பகுதியில் போக்குவரத்துக்கு இடையூறாகச் சாலைகளில் சுற்றித் திரியும் மாடுகள், நாய்கள், பன்றிகளைப் பிடித்து, அவற்றின் உரிமையாளா்களுக்கு அபராதம் விதிக்க கொம்யூன் பஞ்சாயத்து ஆணையா் ஆறுமுகம் உத்தரவிட்டாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சொந்த கிராமத்தில் குடும்பத்துடன் சென்று வாக்களித்த இபிஎஸ்!

மக்களவைத் தேர்தல்: முதல்கட்ட வாக்குப்பதிவு - செய்திகள் உடனுக்குடன்!

மத்திய தோல் ஆராய்ச்சி மையத்தில் வேலை: 22 இல் நேர்முகத் தேர்வு

முதல் நபராக வாக்களித்த நடிகர் அஜித்!

போட்டியில் அனைவருமே எனது சகோதரர்கள்: செளமியா அன்புமணி

SCROLL FOR NEXT